18-7-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||||||
அவ்வைதமிழ்ச்சங்கம், ஆடி 2, (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | ||||||||||
நூல் அறிமுகம் - "சீதை பேசுகிறேன்" | ||||||||||
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது... ".....சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்"
இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00.
இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும். | ||||||||||
திரிகடுகம் பாடல் -84 | ||||||||||
வாய் நன்கு அமையாக் குளனும், வயிறு ஆரத் தாய் முலை உண்ணாக் குழவியும், சேய் மரபின் கல்வி மாண்பு இல்லாத மாந்தரும்,-இம் மூவர் நல்குரவு சேரப்பட்டார். விளக்கம் வழி அமையா குளமும், வயிறு நிரம்ப தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அறிவில்லாத மாந்தரும், ஆகிய இம்மூவரும் வறுமைக்கு ஆளாவார்கள். பொருள் (இ-ள்.) வாய் - நீர் வரும்வழி, நன்கு அமையாக் குளனும் - நன்றாக அமைந்திராத குளமும்; வயிறு ஆர - தன் வயிறு நிரம்பும்படி, தாய்முலை உண்ணா - தாயின் முலைப்பாலை உண்ணாத, குழவியும் - குழந்தையும்; சேய் மரபில் - உயர்ந்த முறைமையில், கல்வி மாண்பு - நூல்களைக் கற்றலினது மாட்சிமைப்பட்ட அறிவு, இல்லாத மாந்தரும் - இல்லாத மனிதரும்; இ மூவர் - ஆகிய இம்மூவரும், நல்குரவு சேரப்பட்டார் - வறுமையால் பீடிக்கப்பட்டவராவர்; (எ-று.)
(க-ரை.) குளத்துக்கு நீர் இன்மையும், குழவிக்குப் பாலின்மையும்; மாந்தருக்கு அறிவின்மையும் நல்குரவு எனப்பட்டன என்பது.
வாய் - வழி, குளன் : குளம் என்பதன் போலி. சேய மரபில் - உயர்ந்த குலத்தில் எனவும், உயர்ந்த முறையில் எனவும் பொருள் கொள்ளலாம். இம் மூவரும் நல்குரவு அடைந்து வருந்துதல் உறுதியாதலால், துணிவுபற்றி நல்குரவு சேரப்பட்டார் என இறந்த காலத்தாற் கூறினார். சேய் மரபில் என்றதாவது நல்லாசிரியரிடத்து அவர் குறிப்பின்வழி ஒழுகி முன்னர் நிகண்டு கற்று ஆராய்ச்சி செய்து இலக்கணநூல் முதலியவற்றைக் கற்பது என்பதாம். | ||||||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||||||
நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும்.
இதற்காக 2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் 192 நாடுகள் உறுப்புரிமையுள்ள ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது[1]. அந்தத் தீர்மானத்தில் இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் ஆண்-பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் மண்டேலா பாடுபட்டார் என்றும், அவர் உழைப்பை நினைவு கூரும் வகையில் அவர் பிறந்த நாளை ஆண்டுதோறும் மண்டேலா சர்வதேச நாளாக கடைப்பிடிப்பது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தத் தீர்மானத்துக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க அது நிறைவேற்றப்பட்டது.
இதன் படி 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் நாள் முதன்முறையாக மண்டேலா பன்னாட்டு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது அவருக்கு வயது 92வது பிறந்த நாளாகும். வரலாற்றில் இன்று · 64 - ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது. · 1965 - சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது. · 1966 - நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது. · 1977 - வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது. | ||||||||||
செய்திகள் | ||||||||||
துணை ஜனாதிபதி தேர்தல்.. முதல்வர் எடப்பாடியிடம் ஆதரவு ... Oneindia Tamil குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ... நியூஸ்7 தமிழ் சென்னைக்கு குடிநீர் தரும் புழல் ஏரி 13 ஆண்டுகளுக்குப் பிறகு ... உள்ளூர் ஆதாரம் தி இந்து சூப்பர் மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் சீனா திரண்ட தசை ... தினத் தந்தி பழைய ரூபாய் நோட்டை மாற்ற மீண்டும் வாய்ப்பு தர முடியாது ... தினகரன் Tamilwin பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..வெடித்து சிதறிய ... தமிழ்வின்
| ||||||||||
வீடு வாடகைக்கு : 3 BHK DDA flat is available for rent at Mayur Vihar Phase I. Close to Metro Station (pocket 4). Semi furnished flat. South Indians preferred. Rent 25 K. Flat ready for immediate occupation. For more details contact 9313848410. |
| |||||||||
நம்மை சுற்றி |
| |||||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |||||
செய்திகள் வரவேற்கப்படுகின்றன! | செய்திகள் வரவேற்கப்படுகின்றன! | செய்திகள் வரவேற்கப்படுகின்றன! | செய்திகள் வரவேற்கப்படுகின்றன! | செய்திகள் வரவேற்கப்படுகின்றன! |
| |||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||||||
|
| |||||||||
No comments:
Post a Comment