24 -1-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், தை – 11 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -9 | ||||||
பெருமை யுடையா ரினத்தின் அகறல் உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல் விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும் முழுமக்கள் காத லவை. விளக்கம் நல்லாரிணக்கம் விடுதலும், தமக்கு மணஞ்செய்து கொடுக்காத பெண்களை விரும்புதலும், பயனற்ற செயல்களைச் செய்தலும், அறிவற்ற மூடர்கள் செயல்களாம். பொருள் பெருமை - பெருந்தன்மை, உடையார் - உடையவருடைய, இனத்தின் - இனத்தினின்றும், அகறல் - நீங்குதலும், உரிமைஇல் - தமக்கு உரியராதல் இல்லாத, பெண்டிரை - மாதரை, காமுற்று - விரும்பி, வாழ்தல் - அவரோடு வாழ்தலும், விழுமிய அல்ல - சிறந்தவை அல்லாதவற்றை, துணிதல் - சிறந்தவையாகத் துணிதலும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், முழுமக்கள் - மூடர், காதலவை - விரும்புபவையாம்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
சி. பி. முத்தம்மா (ஜனவரி 24, 1924 - அக்டோபர் 14, 2009) · சி. பி. முத்தம்மா (Chonira Belliappa Muthamma, கொனெரி பெல்லியப்பா முத்தம்மா, இந்தியக் குடியுரிமைப் பணித் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண். · இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949 இல் பணியில் சேர்ந்தவர். சென்னைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர். இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக உள்ள விதிகளை மாற்றப் பாடுபட்டவர். · வெளியுறவுத் துறையின் பணி விதிகளில் பிரிவு 8(2) திருமணம் செய்து கொள்வதற்குமுன் இத்துறையில் பணிபுரியும் பெண் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டுமென்று பணித்தது. திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணியின் குடும்பப் பொறுப்புகள் வெளியுறவுத்துறையில் அவளது திறமையான பணிக்குத் தடையாக இருக்கிறதென்று அரசு கருதினால் அப்பெண்மணி ராஜினாமா செய்ய வேண்டுமென நிர்பந்திக்கும் என்று அந்தப் பிரிவு சொல்கிறது. இதே துறையின் ஆள்சேர்ப்பு, பணிமுதிர்வு மற்றும் பதவி உயர்வு குறித்தான விதி எண் 18 திருமணமான எந்தப் பெண்ணும் இப்பணியில் சேரும் உரிமை தனக்கு உண்டென உரிமை கோர முடியாது என்கிறது. · இந்த இரண்டு விதிகளூம் பெண்ணுரிமை மற்றும் சமத்துவம் ஆகிய பிரிவுகளுக்கு எதிராக இருக்கிறதென்றும், பெண் என்பதாலேயே பணியிலமர்வதற்கான உரிமை பாதிக்கப்படுவதென்பது அரசியல் சாசனத்திற்கெதிரானதென்றும் இந்தக் காரணங்களாலேயே தனது பதவி உயர்வு தடைபட்டிருக்கிறதென்றும் எனவே இந்த பால்பாகுபாடுகளைக் களைய நீதிமன்றம் உதவ வேண்டும் எனவும் கோரி சி.பி.முத்தம்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். · மேற்காணும் பாலியல் பாகுபாடு நிறைந்த விதிகள் நீக்கப்பட்டதாக வெளியுறவுத் துறையின் சார்பில் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக் கொண்டார். முத்தம்மாவின் தகுதி பதவி உயர்வுக்கு ஏற்றதாக இருக்கிறதென சொல்லி பதவி உயர்வு அளித்த வெளியுறவுத் துறை அவரை ஹேகில் இந்தியத் தூதராக நியமித்தது. · வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இத்தீர்ப்பு ஆணாதிக்கக் கருத்துகள் கொண்ட விதிகள் திருத்தியெழுத வாய்ப்பாக அமைந்தது. 32 ஆண்டுகள் பணியின் பின்னர் இந்தியக் குடியுரிமைப் பணியில் இருந்து 1982 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
ஜல்லிக்கட்டு நடத்த புதிய நிரந்தர சட்டத்திற்கான சட்ட முன்வடிவு: சட்டப்பேரவையில் நிறைவேற்றம் - தி இந்து ஜல்லிக்கட்டு தடை நீங்க சரியான நடைமுறை - தினமணி எருது பந்தயத்துக்கு அனுமதி வேண்டும்; சித்தராமையா ... – தினமலர் வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல: சென்னை காவல்துறை ... - தி இந்து ரூ.803 கோடியில் மானாவாரி வேளாண்மை இயக்கம் - தினமணி ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்படும் - தினகரன் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: அஸ்வின், ஜடேஜாவுக்கு ...- தினமணி | ||||||
வீடு வாடகைக்கு /வாங்க / விற்க | ||||||
One bedroom set at A 9 Dainik Janyug Apt, Vasundhra Enclave, next to Mayur vihar extension.Rs.16000/- plus society maintenance Rs.1000/- per month. Please contact mobile 9810067207 for details. | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
26.1.16 5.15 PM onwards
| Sri Vaikuntnathji Mandir, Ber Sarai, opp JNU | Sri Thyagaraja's 250th Birthday Aradhanai | Delhi Muththamizh Peravai
|
| ||
5.2.16 8.00 AM onwards
| SRI RAM MANDIR, Sector 7, Dwarka | 5th MEDHA DAKSHINAMURTHY (GURU BHAGAVAN) HOMAM (HAVAN) SUNDAY – 5TH FEBRUARY 2017 | SRI RAM MANDIR |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Monday, January 23, 2017
24 -1-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment