Sunday, January 22, 2017

23-1-2017 “News Letter” from Avvai Tamil Sangam

23 -1-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை 10 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -8

தொல்லவையுள் தோன்றுங் குடிமையும் தொக்கிருந்த

நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து

வேந்துவப்ப வாட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்

தாந்தம்மைக் கூறாப் பொருள்.

விளக்கம்

பழமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் அவையில் நல்ல குடிப்பிறப்பும், பலவகை நூலோர் கூடியிருக்கும் அவையில் நல்ல கல்வி அறிவும், போர்க்களத்தில் வேந்தன் மகிழ பகைவரை கொன்று பெற்ற வெற்றியும், தானாகத் தெரிய வேண்டுமே தவிர, தாமே தம்மைக் குறித்து புகழ்ந்து பேசக்கூடாது.

பொருள்

தொல் அவையுள் - பழைமையை ஆராயவல்லோர் கூடியி

ருக்கும் சபையிடத்தே, தோன்றும் - தானாக விளங்கித் தோன்றும், குடிமையும் - குடிப்பிறப்பும், தொக்கு இருந்த - பலவகை நூலோரும் கூடியிருந்த, நல் அவையுள் - நல்ல சபையினிடத்தே, மேம்பட்ட - மேன்மைப்பட்ட, கல்வியும் - படிப்பும், வெல் சமத்து -வெல்லும் போரிடத்தே, வேந்து - தம் வேந்தன், உவப்ப - மகிழ, அட்டு - பகைவரைக் கொன்று, ஆர்த்த - நிறைத்த, வென்றியும் - வெற்றியும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், தாம் - தாமே, தம்மை - தம்மைக் குறித்து, கூறா - புகழ்ந்துபேச வேண்டாத, பொருள் - பொருள்களாம்;

தெரியமா உங்களுக்கு  !....

சுபாஷ் சந்திர போஸ்

·         நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார்.

·         இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

·         இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்தலைவர்களாகவும் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரபுவழியை உடையது.

·         இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியார்களின் பால் ஈடுபாடுடையவராயும் அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின் பால் ஈடுபாடு கொண்டார்; துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ் தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.  மேலும் படிக்க

செய்திகள் 

இளைஞர்கள் போராட்டத்தை மார்ச் 31 வரை தள்ளிவைக்க ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் வேண்டுகோள்  - தி இந்து 

மெரீனாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்: காவல்துறை ...தினமணி

ஹிராக்கந்த் ரயில் விபத்து : பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு - விகடன்

அசாமில் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலி ... - தினத் தந்தி

அமெரிக்காவில் பீட்டாவின் தலைமையகத்தை முற்றுகையிட்ட ... - தினமலர்

 குடியரசுதினம்: முதல் முறையாக கொடியேற்றுகிறார் முதல்வர் - தினமணி

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ... - தினத் தந்தி

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

One bedroom set at A 9 Dainik Janyug Apt, Vasundhra Enclave, next to Mayur vihar extension.Rs.16000/- plus society maintenance Rs.1000/- per month.  Please contact mobile 9810067207 for details.

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

26.1.16

5.15 PM onwards

 

Sri Vaikuntnathji Mandir, Ber Sarai, opp JNU

Sri Thyagaraja's 250th Birthday Aradhanai

Delhi Muththamizh Peravai

 

Details Click here

 

5.2.16

8.00 AM onwards

 

SRI RAM MANDIR, Sector 7, Dwarka

5th MEDHA DAKSHINAMURTHY

(GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SUNDAY – 5TH FEBRUARY 2017

SRI RAM MANDIR

www.srirammandirdwarka.org

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment