Monday, June 20, 2016

20-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam



 

20-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி -06(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  குறிஞ்சி_10

 

பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச்
சொல்லுவாளாய், செறிப்பு அறிவுறீஇயது

 

பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள்
நன் மலை நாடன் நலம் புனைய,-மென்முலையாய்!-
போயின, சில் நாள் புனத்து மறையினால்
ஏயினர் இன்றி, இனிது.

. பதவுரை  :-

மென்முலையாய் - மிருதுவான முலைகளையுடைய தலைவியே ! நல் மலை - வளமிக்க மலைகள் நிறைந்த, நாடன் - நாட்டிற் குரியவனாகிய தலைவன் ; புனத்து - தினைப்புனத்திற்குப் பக்கத்திலுள்ள, பொன் இணர் - பொன்போன்ற பூங்கொத்துக்களையுடைய, வேங்கை - வேங்கை மரங்கள் நிறைந்து, கவினிய - அழகு மிகுந்த, பூம்பொழிலுள் - பொலிவுமிக்க சோலையினிடத்திலே, மறையினால் - நீசெய்யுங் களவுப் புணர்ச்சியில், ஏயினார் - இடையூறாகக் குறுக்கிட்டார், இன்றி - இல்லாமல், இனிது - இன்பமாக, நலம் புனைய - புணர்ச்சியின் மகிழ்ந்து நினது நலத்தைப் பாராட்டும்படி, சின்னாள் - சிலநாட்கள், போயின - நன்கே கழிந்தன, (இனி எப்படியாமோ? - அறியேம் என்று தலைவிக்குத் தோழி கூறினாள்.)

 விளக்கம்:-
மென்மையான மார்பகங்களையுடைய தலைவியே! நல்ல மலை வளமிக்க நாட்டுத்தலைவன் தினைப்புனத்திற்குப் பக்கத்திலுள்ள வேங்கை மரங்கள் நிறைந்துள்ள அழகுடைய சோலையின்கண் நின்னோடு கலந்தபின் எவருடைய குறுக்கீடும் இல்லாமல் இன்பமாய்ச் சில நாட்கள் கழிந்தன. இனி என்ன ஆகுமோ, அறியேன்" என்று தலைவிக்குத் தோழி கூறினாள்.

செய்திகள்   

முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி - சட்டமன்றத்தில் ...  

படிக்கட்டில் பயணித்தால் பஸ் பாஸ் ரத்து  

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது  

என்எஸ்ஜி விவகாரத்தில் ஆதரவு திரட்ட முன்னறிவிப்பு இன்றி சீனா ...  

கர்நாடகாவில் ஊழல் புகார், சர்ச்சைகளில் சிக்கிய 14 அமைச்சர்கள் ...  

இந்தோனேசியாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு  

நாடு முழுவதும் பதுக்கிய 1.30 லட்சம் டன் பருப்பு பறிமுதல்

பொறியியல் கவுன்சிலிங் ரேண்டம் நம்பர் இன்று வெளியானது ...  

தமிழ் மொழியும் திருக்குறளும் இல்லாமல் இந்தியா முழுமை ...  

பெனால்டி வாய்ப்பு உட்பட பலவற்றை நழுவ விட்ட ரொனால்டோ ...  

விற்பனைக்கு

FOR  IMMEDIATE SALE - 2 BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA

Property Description : Newly constructed  beautifully maintained builder floor apartment with area 1010 sqm & Camera Installed at all floors for Security... Just 4 km from City Center Metro Station.Semi Modular Fitting in Kitchen. Good quality wood work....Ownership will be free hold. தொடர்புக்கு- Mr Sri ram- 8826567774

 கும்பாபிஷேகம்

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment