02-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||
| அவ்வை தமிழ்ச் சங்கம், வைகாசி -20(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||
ஐந்திணை ஐம்பது- 1 - முல்லை _3 | |||
முல்லை _பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது மின்னும், முழக்கும், இடியும், மற்று இன்ன கொலைப் படை சாலப் பரப்பிய, - முல்லை முகை வென்ற பல்லினாய்! - இல்லையோ, மற்று நமர் சென்ற நாட்டுள் இக் கார்? பதவுரை :- முல்லை முகை - முல்லை யரும்புகளை, வென்ற - தன்மையான் மேற்கொண்ட, பல்லினாய் - பல்லழகு மிக்க தலைவியே, நமர் - நம்மவராகிய தலைவர், சென்ற - பிரிந்து போயிருக்கும், நாட்டுள் - நாட்டிடத்திலே, இக்கார் - இங்குக் காணப்படும் மேகத் திரட்சி, மின்னும் - மின்னலும், முழக்கும் - ஆரவாரமும், இடியும் - இடி வீழ்ச்சியும், இன்ன - இவை போன்ற பிறவுமாகிய, கொலை படை - பிரிந்தாரை வருத்ததற்குரிய ஆயுதங்களை, சால - மிகுதியும், பரப்பிய - பரப்புவதற்கு, இல்லையோ - இல்லாமற் போயிற்றோ? (என்று தோழி தலைவியினிடத்தில் கூறினாள்.) விளக்கம். "தலைவியே! மின்னலும், இடியும், இடியின் முழக்கமும் இவைபோன்ற இன்ன பிறவுமாகிய பிரிந்தாரைக் கொல்லும் படைக்கலங்கள் மிகுதியாகப் பரப்புவதற்கு இல்லாமல் போய்விட்டதோ? முல்லைப் பூவினை வென்ற பற்களை உடைய பெண்ணே! நம்முடைய தலைவன் சென்ற நாட்டில் இக்கார்காலம் இல்லையோ?" என்று குறிப்பாகக் கேட்கிறாள். | |||
தெரியுமா உங்களுக்கு- தமிழ்த் தொண்டு | |||
திரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம், தமிழ்ப்பேராயம் - Thamizh Academy என்னும் ஓர் அமைப்பினை நிறுவித் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான பல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இணையவழியிலான தமிழ்க்கல்வி, தமிழ்ச்சமயக்கல்வி, கணினித்தமிழ்க் கல்வி ஆகிய துறைகளின்வழி பட்டயப் படிப்புகள், சான்றிதழ்ப் படிப்புகளை வழங்குவதோடு அரிய நூல்களைப் பதிப்பு செய்யும் பணியையும் செய்துவருகிறது. இவற்றோடு தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், சாதனைகள்புரிந்த பேரறிஞர்கள் ஆகியோர்க்கு ரூ.20,50,000 பெறுமான 11 வகை விருதுகளை 2012, 2013, 2014, 2015 ஆகிய 4 நான்கு ஆண்டுகளாக வழங்கிவந்துள்ளது. இவ்வாண்டு முதல் முதல் இவ்விருதுகளின் விதிகளில் சில மாற்றங்களும் புதிய விருதுச் சேர்க்கையும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறாகத் தமிழ்ப்பேராய விருதுகள் 2016 முதல் 14பேருக்கு 22 இலட்சம் ரூபாய் தொகையுடைய விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு வழங்கப்படவிருக்கும் விருதுகளும் தொகையும் விதிமுறைகளும் விளம்பரக் குறிப்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பரிந்துரைகளும் நூல்களும் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 30.06.2016. பரிந்துரைகளையும் நூல்களையும் அனுப்பவேண்டிய முகவரி: துறைத்தலைவர், தமிழ்ப்பேராயம், மைய நூலகக் கட்டடம், நான்காம் தளம், SRM பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் - 603 203. தொலைபேசி: 044 27417375. மின்னஞ்சல்: tamilperayam@srmuniv.ac.in | |||
செய்திகள் | |||
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ... கூகூல் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் ...தி இந்து காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி? - இந்த மாத இறுதிக்குள் ... தி இந்து 017-ம் ஆண்டு சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி: ஒரே பிரிவில் ...தி இந்து தேசியப் பேரிடர் குறித்த மேலாண்மை செயல் திட்டம் - -- தினகரன் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்வு---- தினகரன் மத்திய அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை போதுமானதல்ல ...தினமணி எகிப்து: கடலில் விழுந்த விமானத்தின் கருப்புப் பெட்டி ....தினமணி அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி--- தினத் தந்தி
| |||
நம்மை சுற்றி ---- கும்பாபிஷேகம் – ஒரு வேண்டுகோள் | |||
அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா - வில் வரும் 2016- ஜூலை 10ந் தேதி மஹா கும்பாபிஷேகம் மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது. ஜூலை 6ந் தேதி முதல் விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15 மஹா கும்பாபிஷேகம் நடைபெரும். தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின் ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம். பக்தகோடிகள் மஹா கும்பாபிஷேகத்திற்க்கு நிதி வழங்க கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம் Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345. ( Please send SMS to 8826655855 if you have donated - for information.) | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment