01-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி –19(வெள்ளி ), திருவள்ளுவராண்டு 2046, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
களவழி நாற்பது – 9 | |||||
மேலோரைக் கீழோர் குறுதிக் குறைத்திட்ட காலார்சோ டற்ற கழற்கா லிருங்கடல் ஊணில் சுறபிறழ்வ போன்ற புனனாடன் நேராரை யட்ட களத்து. விளக்கம் சோழன் பகைவர்களை வென்ற களத்தில், யானை, குதிரை, தேர்கள் மீதிருந்து போரிடும் வீரர்களின் கால்கள், கீழிருந்து போரிடும் வீரர்களால் வெட்டப்பெற்றுச் செருப்புகள் இல்லாமல் இரத்த வெள்ளத்துள் வீழ்ந்து கிடக்கும் காட்சி பசியோடிருக்கும் சுறாமீன்கள் கடல் நீரின் மேல் வந்து இரைதேடிப் புரள்வது போல் இருந்தது. பொருள் புனல் நாடன்- நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், நேராரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மேலோரை - (குதிரை முதலாயினவற்றின்) மேலிருந்தவரை, கீழோர் - கீழ் நின்ற காலாட்கள், குறுகி சென்ற சார்ந்து, குறைத்திட்ட - துணித்த, கால் ஆர் சோடு காற்கிட்ட அரணத்தோடு, அற்ற - அறுபட்ட, கழல், கால் - வீரக்கழலணிந்த கால்கள், இருங்கடல் - பெரிய கடலுள், ஊண் இல் - இரையில்லாத, சுறபிறழ்வ போன்ற - சுறாமீன்கள் பிறழ்வனவற்றை யொத்தன. | |||||
தெரியுமா உங்களுக்கு! | |||||
தி. வே. கோபாலையர் ( ஜனவரி 22, 1926 - ஏப்ரல் 1, 2007) · தி. வே. கோபாலையர் ஒரு தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் மற்றும் பேராசிரியர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்டவர். · தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். · இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர். இராமாயணத்திலும், சீவக சிந்தாமணியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.மேலும் படிக்க | |||||
ஏப்ரல்-01, முட்டாள்கள் தினக் கவிதை | |||||
எல்லோரும் ஒருநாளில் எங்கேயோ ஏமாற்றம் ஏய்ப்பவனின் அடிமையாகி ஏழைகளின் ஏமாற்றம் கொல்லும்நோய் வந்ததாலே கோடீஸ்வரன் ஏமாற்றம் கூடினாலும் குறைசொல்லும் கூட்டணியும் ஏமாற்றம் வெல்லுகிற வீரனுக்கும் வயோதிகம் ஏமாற்றம் வந்தபின்னே தவிக்கின்ற வறுமையும் ஏமாற்றம் சொல்லுகிற வார்த்தையில் சுட்டெரிக்க ஏமாற்றம் சுதந்திரத்தை தனக்கெனவே சொந்தமாக்க ஏமாற்றம்
அதிகப்படி இலவசமோ அரசியலில் ஏமாற்றம் ஆட்சியாளர் வாக்குறுதி அன்றாட ஏமாற்றம் துதிப்பாடும் கூட்டங்கள் தொடர்வதும் ஏமாற்றம் துளிர்த்திடும் லஞ்சஊழல் துறைதோறும் ஏமாற்றம் முதியோரை காக்காமல் முடக்குவதும் ஏமாற்றம் முதலிலா தரகுத்தொழில் மொத்தமாய் ஏமாற்றம் விதியெனவே நினைப்பது வாழ்க்கையே ஏமாற்றம் விதைக்காமல் உழுவதால் விளைவதோ ஏமாற்றம்
நதியிணைப்பு செய்யாமை நாட்டிற்கே ஏமாற்றம் நாட்டுக்குள் பிரிவினையால் நல்லிணக்க ஏமாற்றம் கதியற்ற தமிழருக்கு கண்ணீரே ஏமாற்றம் காத்திட மனமில்லா கட்சிகளின் ஏமாற்றம் நிதிக்கேட்டு தொண்டர்களை நெருக்குவதும் ஏமாற்றம் நாளுமொரு கட்சியென நடைமுறையும் ஏமாற்றம் மதிகலங்கும் நன்கொடையால் மாணவர்கள் ஏமாற்றம் மகிழ்ந்திடும் முட்டாள்தினம் மடமையின் ஏமாற்றம்.
-கவிஞர் ப.கண்ணன்சேகர் 9894976159. திமிரி. | |||||
செய்திகள் | |||||
பயங்கரவாதத்தை தடுப்பதில் ஐ.நா. தோல்வி: மோடி விமர்சனம் - தினமணி கொல்கத்தாவில் பயங்கரம்: பாலம் இடிந்து விழுந்து 18 பேர் பலி; 60 ...- தினத் தந்தி 50000 ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத உடை – தினகரன் போலி ஆவணங்கள் மூலம் செல்போன் சிம் கார்டு வாங்கிய வழக்கு ... - தினத் தந்தி "பவர் ஹிட்டிங்" மே.இ.தீவுகள் அபார வெற்றி: இந்தியாவை வீழ்த்தி ...- தி இந்து இந்திய ஓபன்: காலிறுதியில் சாய்னா, சிந்து இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா - தினமணி | |||||
வீடு வாடகைக்கு | |||||
2BHK House available on Rent Veg Family Preferred, Sector 17 (Konark Enclave), Vasundhara Near Saibaba Temple Vasundhara., For details contact Mr.Ramesh Mobile: 9810813014 1BHK in 1st floor, sector 14 Dwarka available for rent. (Semi Furnished). Expected Rent is Rs 9,500 p.m . Very good water supply. Car Parking space. House is available from 1st April 2016. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 | |||||
Dwarkalaya's Cultural Program - Call for nominations | |||||
Annual Cultural Program has been fixed on Sunday, May 15, 2016 at Delhi Tamil Sangam between 10.00 am - 1.00 pm · Nominations called for from all interested members, junior, senior and very senior, too! · Age no bar. · You can be a part of dance (folk or couple), dance drama, debate (patti mandram), fashionista, fusion in music (vocal or instrumental). . . · No solo programs! For patti mandram (Tamil debate), பட்டிமன்றம் தலைப்பு: தாத்தா, பாட்டி ஆன பிறகு வாழ்க்கை - சுவையா, சுமையா ( 'Thatha Patti Ana Piragu Vazhkai Suvaiya, Sumaya') For details, contact 9810499225 / dwarkalaya.regd@gmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
2.4.2016 & 3.4.2016 6.00 AM Onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 89 | Radha Kalyana Mahotsavam by Brahmasri J Ramakrishnan Bagavathar; Brahmasri O V Ramani Bagavathar & Group 2.4.2016 06:00 AM : Sri Mahaganapathi Homam followed by Sri Lalitha Sahasranama & Sri Vishnu Sahasranama Parayanam 09.00 AM : ASHTAPADI 06:00 PM : PROCESSION [ மாப்பிள்ளை அளைப்பு ] 08.00 PM : DIVYANAMA BHAJAN & Dolotsavam 3.4.2016 06:00 AM : Sri Vigneshwar Puja 07:00 AM : UNCHAVRUTHI 08.00 AM : SRI RADHA KALYANAM followed by Anjaneya Utsavam 01:30 PM : Samaradhanai | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | sahasranamam1516@gmail.com www.facebook.com/rohinisrivishnusahanamam | |
1.4.2016 & 2.4.2016 6.30 PM Onwards | திருவள்ளுவர் கலை அரங்கம், தில்லி தமிழ் சங்கம். | "ப்ரவசன திலகம்" தாமல் ஸ்ரீ எஸ்.ராமகிருஷ்ணன் சுவாமி அவர்களின் இரு உபன்யாசங்கள் 1.4.2016 ஸ்ரீ சீதா கல்யாணம் 1.4.2016 சுந்தர காண்டம் | Delhi Tamil Sangam | ||
3.4.2016 6.00 PM Onwards | திருவள்ளுவர் கலை அரங்கம், தில்லி தமிழ் சங்கம். | கவிஞர் ரவி சுப்பிரமணியன் அவர்கள் எழுதி இயக்கிய "திருலோகம் என்றொரு கவி ஆளுமை" மகாகவி பாரதியார் புகழ் பரப்பிய கவிஞர் திரிலோக சீத்தாராம் குறித்த ஆவணப்படம் திரையிடல் | Delhi Tamil Sangam | ||
3.4.2016 9.30 AM Onwards | ஸ்ரீ வைகுண்ட நாதர் கோவில், பேர் சராய்(ஜே.என்.யு அருகில்) புது தில்லி | "ப்ரவசன திலகம்" தாமல் ஸ்ரீ எஸ்.ராமகிருஷ்ணன் சுவாமி அவர்களின் இரு உபன்யாசம் நாராயணீய சாரம்
| தில்லி முத்தமிழ் பேரவை | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Thursday, March 31, 2016
01-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment