Sunday, January 29, 2017

30 -1-2017 “News Letter” from Avvai Tamil Sangam

30 -1-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 


 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை – 17 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -9

கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும்

மூத்தோரை இல்லா அவைக் களனும், பாத்து உண்ணாத்

தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும்

நன்மை பயத்தல் இல.

விளக்கம்

கற்பிக்க இயலாதவர் ஊரிலிருத்தலும், கல்வி கேள்விகளில் முதிர்ந்தவர் இல்லாத சபையும், பகுத்து உண்ணும் தன்மை இல்லாதவர் பக்கத்தில் இருத்தலும் ஒருவருக்கு நன்மை தராது..

பொருள்

கணக்காயர் - நெடுங்கணக்கு முதலியன கற்பிப்பவரை (ஆசிரியரை), இல்லாத - உடையதாயிராத, ஊரும் - ஊரிலிருத்தலும், பிணக்கு - மாறுபட்ட பொருளை, அறுக்கும் - நீக்கும் மூத்தோரை - (கல்விகேள்விகளில்) முதிர்ந்தவரை, இல்லா - உடையதல்லாத, அவைக் களனும் - சபையிலிருத்தலும், பாத்து - பகுத்து, உண்ணும் - சாப்பிடும், தன்மை - குணம், இலாளர் - இல்லாதவர், அயல் இருப்பும் - பக்கத்திலிருத்தலும், இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், நன்மை - (ஒருவனுக்கு) நன்மையை, பயத்தல் - தருவன, இல - அல்லவாம், (தீமை பயப்பனவாம்);

தெரியமா உங்களுக்கு  !....

·         தியாகிகள் நாள்

தியாகிகள் நாள் இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுவதாகும். தேசத்தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி மறைந்த சனவரி 30 ஆம் நாள் ஆண்டுதோறும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

செய்திகள் 

ரயில் கட்டண சலுகைக்கு ஆதார் எண் கட்டாயம்?  - தி இந்து 

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு - தி இந்து

 வேட்பாளருக்கு கூடுதல் பணம்; நிராகரித்தது ஆர்.பி.ஐ., - தினமலர்

தீவிரவாதிகள் உட்பட 57 பேர் பரிதாப பலி- தினகரன்

இளைஞர்களை பயங்கரவாதிகளாக காங்கிரஸ் சித்தரித்தது: பிரதமர் ... - தினகரன்

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: 'இந்தியா ஏ' அணிக்கு அபிநவ் முகுந்த் கேப்டன் - தி இந்து 

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

One bedroom set at A 9 Dainik Janyug Apt, Vasundhra Enclave, next to Mayur vihar extension.Rs.16000/- plus society maintenance Rs.1000/- per month.  Please contact mobile 9810067207 for details.

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

4.2.17

 

Noida Sankar Mutt (Sector 42, Noida)

Radha Kalyana Mahotsav  performed by VSS BHAJAN MANDALI, Noida

4th Feb, 2017

05.15 AM to 06.15 AM

Sri Maha Ganapathy Homam

06.15 AM to 06.30 AM

Mukurthakal

06.30 AM to 07.45 AM

Sri Venkatesa Suprapadam & Vishnu Sahasranama Parayanam

08.00 AM to 09.00 AM

Narayaneeyam by Devotees

09.00 AM to 01.00 PM

Thodayamangalam, Guru Dhyanam, Ashtapadi Bhajans

02.00 PM to 05.00 PM

Nama Sankeertanam (continues) - Ashtapadi Bhajans, Tharangam, Panchapati, Pooja, Devta Dhyanam

05.00 PM to 06.15 PM

Sri Vishnu Sahasranama Parayanam

Kolattam 06.30 PM to 07.15PM

by Devotees

07.15 PM to 08.00 PM

Narayana Teerta Tarangini Kritis

08.00 PM to 11.30 PM

Divyanama Bhajans, Dolotsavam, Mangala Harati.

VSS Noida

vssnoida@yahoo.com

Suresh S - 9811933299.

 

5.2.17

 

08.00 AM to 09.00 AM

Pancharatna Kritis

09.15 AM to 12.15 PM

SRI RADHA KRISHNA KALYANA MAHOTSAVAM

12.15 PM to 12.45 PM

Sri Anjaneya Utsavam, Mangalam

12.45 PM to 01.00 PM

Vote of Thanks

1.15 PM onwards

Poor Feeding & Annadhanam

 

5.2.17

8.00 AM onwards

 

SRI RAM MANDIR, Sector 7, Dwarka

5th MEDHA DAKSHINAMURTHY

(GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SUNDAY – 5TH FEBRUARY 2017

SRI RAM MANDIR

www.srirammandirdwarka.org

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

Monday, January 23, 2017

24 -1-2017 “News Letter” from Avvai Tamil Sangam

24 -1-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை 11 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -9

பெருமை யுடையா ரினத்தின் அகறல்

உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்

விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும்

முழுமக்கள் காத லவை.

விளக்கம்

நல்லாரிணக்கம் விடுதலும், தமக்கு மணஞ்செய்து கொடுக்காத பெண்களை விரும்புதலும், பயனற்ற செயல்களைச் செய்தலும், அறிவற்ற மூடர்கள் செயல்களாம்.

பொருள்

பெருமை - பெருந்தன்மை, உடையார் - உடையவருடைய, இனத்தின் - இனத்தினின்றும், அகறல் - நீங்குதலும், உரிமைஇல் - தமக்கு உரியராதல் இல்லாத, பெண்டிரை - மாதரை, காமுற்று - விரும்பி, வாழ்தல் - அவரோடு வாழ்தலும், விழுமிய அல்ல - சிறந்தவை அல்லாதவற்றை, துணிதல் - சிறந்தவையாகத் துணிதலும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், முழுமக்கள் - மூடர், காதலவை - விரும்புபவையாம்;

தெரியமா உங்களுக்கு  !....

சி. பி. முத்தம்மா (ஜனவரி 24, 1924 - அக்டோபர் 14, 2009)

·         சி. பி. முத்தம்மா (Chonira Belliappa Muthamma, கொனெரி பெல்லியப்பா முத்தம்மா இந்தியக் குடியுரிமைப் பணித் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண்.

·         இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949 இல் பணியில் சேர்ந்தவர். சென்னைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர். இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக உள்ள விதிகளை மாற்றப் பாடுபட்டவர்.

·         வெளியுறவுத் துறையின் பணி விதிகளில் பிரிவு 8(2) திருமணம் செய்து கொள்வதற்குமுன் இத்துறையில் பணிபுரியும் பெண் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டுமென்று பணித்தது. திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணியின் குடும்பப் பொறுப்புகள் வெளியுறவுத்துறையில் அவளது திறமையான பணிக்குத் தடையாக இருக்கிறதென்று அரசு கருதினால் அப்பெண்மணி ராஜினாமா செய்ய வேண்டுமென நிர்பந்திக்கும் என்று அந்தப் பிரிவு சொல்கிறது. இதே துறையின் ஆள்சேர்ப்பு, பணிமுதிர்வு மற்றும் பதவி உயர்வு குறித்தான விதி எண் 18 திருமணமான எந்தப் பெண்ணும் இப்பணியில் சேரும் உரிமை தனக்கு உண்டென உரிமை கோர முடியாது என்கிறது.

·         இந்த இரண்டு விதிகளூம் பெண்ணுரிமை மற்றும் சமத்துவம் ஆகிய பிரிவுகளுக்கு எதிராக இருக்கிறதென்றும், பெண் என்பதாலேயே பணியிலமர்வதற்கான உரிமை பாதிக்கப்படுவதென்பது அரசியல் சாசனத்திற்கெதிரானதென்றும் இந்தக் காரணங்களாலேயே தனது பதவி உயர்வு தடைபட்டிருக்கிறதென்றும் எனவே இந்த பால்பாகுபாடுகளைக் களைய நீதிமன்றம் உதவ வேண்டும் எனவும் கோரி சி.பி.முத்தம்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

·         மேற்காணும் பாலியல் பாகுபாடு நிறைந்த விதிகள் நீக்கப்பட்டதாக வெளியுறவுத் துறையின் சார்பில் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக் கொண்டார். முத்தம்மாவின் தகுதி பதவி உயர்வுக்கு ஏற்றதாக இருக்கிறதென சொல்லி பதவி உயர்வு அளித்த வெளியுறவுத் துறை அவரை ஹேகில் இந்தியத் தூதராக நியமித்தது.

·         வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இத்தீர்ப்பு ஆணாதிக்கக் கருத்துகள் கொண்ட விதிகள் திருத்தியெழுத வாய்ப்பாக அமைந்தது. 32 ஆண்டுகள் பணியின் பின்னர் இந்தியக் குடியுரிமைப் பணியில் இருந்து 1982 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். மேலும் படிக்க

செய்திகள் 

ஜல்லிக்கட்டு நடத்த புதிய நிரந்தர சட்டத்திற்கான சட்ட முன்வடிவு: சட்டப்பேரவையில் நிறைவேற்றம்  - தி இந்து 

ஜல்லிக்கட்டு தடை நீங்க சரியான நடைமுறை - தினமணி

எருது பந்தயத்துக்கு அனுமதி வேண்டும்; சித்தராமையா ...தினமலர்

வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல: சென்னை காவல்துறை ... - தி இந்து

 ரூ.803 கோடியில் மானாவாரி வேளாண்மை இயக்கம் - தினமணி

ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்படும் - தினகரன்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: அஸ்வின், ஜடேஜாவுக்கு ...- தினமணி

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

One bedroom set at A 9 Dainik Janyug Apt, Vasundhra Enclave, next to Mayur vihar extension.Rs.16000/- plus society maintenance Rs.1000/- per month.  Please contact mobile 9810067207 for details.

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

26.1.16

5.15 PM onwards

 

Sri Vaikuntnathji Mandir, Ber Sarai, opp JNU

Sri Thyagaraja's 250th Birthday Aradhanai

Delhi Muththamizh Peravai

 

Details Click here

 

5.2.16

8.00 AM onwards

 

SRI RAM MANDIR, Sector 7, Dwarka

5th MEDHA DAKSHINAMURTHY

(GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SUNDAY – 5TH FEBRUARY 2017

SRI RAM MANDIR

www.srirammandirdwarka.org

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


Sunday, January 22, 2017

23-1-2017 “News Letter” from Avvai Tamil Sangam

23 -1-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை 10 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -8

தொல்லவையுள் தோன்றுங் குடிமையும் தொக்கிருந்த

நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து

வேந்துவப்ப வாட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்

தாந்தம்மைக் கூறாப் பொருள்.

விளக்கம்

பழமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் அவையில் நல்ல குடிப்பிறப்பும், பலவகை நூலோர் கூடியிருக்கும் அவையில் நல்ல கல்வி அறிவும், போர்க்களத்தில் வேந்தன் மகிழ பகைவரை கொன்று பெற்ற வெற்றியும், தானாகத் தெரிய வேண்டுமே தவிர, தாமே தம்மைக் குறித்து புகழ்ந்து பேசக்கூடாது.

பொருள்

தொல் அவையுள் - பழைமையை ஆராயவல்லோர் கூடியி

ருக்கும் சபையிடத்தே, தோன்றும் - தானாக விளங்கித் தோன்றும், குடிமையும் - குடிப்பிறப்பும், தொக்கு இருந்த - பலவகை நூலோரும் கூடியிருந்த, நல் அவையுள் - நல்ல சபையினிடத்தே, மேம்பட்ட - மேன்மைப்பட்ட, கல்வியும் - படிப்பும், வெல் சமத்து -வெல்லும் போரிடத்தே, வேந்து - தம் வேந்தன், உவப்ப - மகிழ, அட்டு - பகைவரைக் கொன்று, ஆர்த்த - நிறைத்த, வென்றியும் - வெற்றியும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், தாம் - தாமே, தம்மை - தம்மைக் குறித்து, கூறா - புகழ்ந்துபேச வேண்டாத, பொருள் - பொருள்களாம்;

தெரியமா உங்களுக்கு  !....

சுபாஷ் சந்திர போஸ்

·         நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார்.

·         இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

·         இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்தலைவர்களாகவும் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரபுவழியை உடையது.

·         இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியார்களின் பால் ஈடுபாடுடையவராயும் அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின் பால் ஈடுபாடு கொண்டார்; துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ் தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.  மேலும் படிக்க

செய்திகள் 

இளைஞர்கள் போராட்டத்தை மார்ச் 31 வரை தள்ளிவைக்க ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் வேண்டுகோள்  - தி இந்து 

மெரீனாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்: காவல்துறை ...தினமணி

ஹிராக்கந்த் ரயில் விபத்து : பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு - விகடன்

அசாமில் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலி ... - தினத் தந்தி

அமெரிக்காவில் பீட்டாவின் தலைமையகத்தை முற்றுகையிட்ட ... - தினமலர்

 குடியரசுதினம்: முதல் முறையாக கொடியேற்றுகிறார் முதல்வர் - தினமணி

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ... - தினத் தந்தி

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

One bedroom set at A 9 Dainik Janyug Apt, Vasundhra Enclave, next to Mayur vihar extension.Rs.16000/- plus society maintenance Rs.1000/- per month.  Please contact mobile 9810067207 for details.

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

26.1.16

5.15 PM onwards

 

Sri Vaikuntnathji Mandir, Ber Sarai, opp JNU

Sri Thyagaraja's 250th Birthday Aradhanai

Delhi Muththamizh Peravai

 

Details Click here

 

5.2.16

8.00 AM onwards

 

SRI RAM MANDIR, Sector 7, Dwarka

5th MEDHA DAKSHINAMURTHY

(GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SUNDAY – 5TH FEBRUARY 2017

SRI RAM MANDIR

www.srirammandirdwarka.org

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com