Monday, January 23, 2017

24 -1-2017 “News Letter” from Avvai Tamil Sangam

24 -1-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை – 11 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -9

பெருமை யுடையா ரினத்தின் அகறல்

உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்

விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும்

முழுமக்கள் காத லவை.

விளக்கம்

நல்லாரிணக்கம் விடுதலும், தமக்கு மணஞ்செய்து கொடுக்காத பெண்களை விரும்புதலும், பயனற்ற செயல்களைச் செய்தலும், அறிவற்ற மூடர்கள் செயல்களாம்.

பொருள்

பெருமை - பெருந்தன்மை, உடையார் - உடையவருடைய, இனத்தின் - இனத்தினின்றும், அகறல் - நீங்குதலும், உரிமைஇல் - தமக்கு உரியராதல் இல்லாத, பெண்டிரை - மாதரை, காமுற்று - விரும்பி, வாழ்தல் - அவரோடு வாழ்தலும், விழுமிய அல்ல - சிறந்தவை அல்லாதவற்றை, துணிதல் - சிறந்தவையாகத் துணிதலும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், முழுமக்கள் - மூடர், காதலவை - விரும்புபவையாம்;

தெரியமா உங்களுக்கு  !....

சி. பி. முத்தம்மா (ஜனவரி 24, 1924 - அக்டோபர் 14, 2009)

·         சி. பி. முத்தம்மா (Chonira Belliappa Muthamma, கொனெரி பெல்லியப்பா முத்தம்மா,  இந்தியக் குடியுரிமைப் பணித் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண்.

·         இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949 இல் பணியில் சேர்ந்தவர். சென்னைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர். இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக உள்ள விதிகளை மாற்றப் பாடுபட்டவர்.

·         வெளியுறவுத் துறையின் பணி விதிகளில் பிரிவு 8(2) திருமணம் செய்து கொள்வதற்குமுன் இத்துறையில் பணிபுரியும் பெண் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டுமென்று பணித்தது. திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணியின் குடும்பப் பொறுப்புகள் வெளியுறவுத்துறையில் அவளது திறமையான பணிக்குத் தடையாக இருக்கிறதென்று அரசு கருதினால் அப்பெண்மணி ராஜினாமா செய்ய வேண்டுமென நிர்பந்திக்கும் என்று அந்தப் பிரிவு சொல்கிறது. இதே துறையின் ஆள்சேர்ப்பு, பணிமுதிர்வு மற்றும் பதவி உயர்வு குறித்தான விதி எண் 18 திருமணமான எந்தப் பெண்ணும் இப்பணியில் சேரும் உரிமை தனக்கு உண்டென உரிமை கோர முடியாது என்கிறது.

·         இந்த இரண்டு விதிகளூம் பெண்ணுரிமை மற்றும் சமத்துவம் ஆகிய பிரிவுகளுக்கு எதிராக இருக்கிறதென்றும், பெண் என்பதாலேயே பணியிலமர்வதற்கான உரிமை பாதிக்கப்படுவதென்பது அரசியல் சாசனத்திற்கெதிரானதென்றும் இந்தக் காரணங்களாலேயே தனது பதவி உயர்வு தடைபட்டிருக்கிறதென்றும் எனவே இந்த பால்பாகுபாடுகளைக் களைய நீதிமன்றம் உதவ வேண்டும் எனவும் கோரி சி.பி.முத்தம்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

·         மேற்காணும் பாலியல் பாகுபாடு நிறைந்த விதிகள் நீக்கப்பட்டதாக வெளியுறவுத் துறையின் சார்பில் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக் கொண்டார். முத்தம்மாவின் தகுதி பதவி உயர்வுக்கு ஏற்றதாக இருக்கிறதென சொல்லி பதவி உயர்வு அளித்த வெளியுறவுத் துறை அவரை ஹேகில் இந்தியத் தூதராக நியமித்தது.

·         வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இத்தீர்ப்பு ஆணாதிக்கக் கருத்துகள் கொண்ட விதிகள் திருத்தியெழுத வாய்ப்பாக அமைந்தது. 32 ஆண்டுகள் பணியின் பின்னர் இந்தியக் குடியுரிமைப் பணியில் இருந்து 1982 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். மேலும் படிக்க

செய்திகள் 

ஜல்லிக்கட்டு நடத்த புதிய நிரந்தர சட்டத்திற்கான சட்ட முன்வடிவு: சட்டப்பேரவையில் நிறைவேற்றம்  - தி இந்து 

ஜல்லிக்கட்டு தடை நீங்க சரியான நடைமுறை - தினமணி

எருது பந்தயத்துக்கு அனுமதி வேண்டும்; சித்தராமையா ... – தினமலர்

வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல: சென்னை காவல்துறை ... - தி இந்து

 ரூ.803 கோடியில் மானாவாரி வேளாண்மை இயக்கம் - தினமணி

ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்படும் - தினகரன்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: அஸ்வின், ஜடேஜாவுக்கு ...- தினமணி

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

One bedroom set at A 9 Dainik Janyug Apt, Vasundhra Enclave, next to Mayur vihar extension.Rs.16000/- plus society maintenance Rs.1000/- per month.  Please contact mobile 9810067207 for details.

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

26.1.16

5.15 PM onwards

 

Sri Vaikuntnathji Mandir, Ber Sarai, opp JNU

Sri Thyagaraja's 250th Birthday Aradhanai

Delhi Muththamizh Peravai

 

Details Click here

 

5.2.16

8.00 AM onwards

 

SRI RAM MANDIR, Sector 7, Dwarka

5th MEDHA DAKSHINAMURTHY

(GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SUNDAY – 5TH FEBRUARY 2017

SRI RAM MANDIR

www.srirammandirdwarka.org

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


Sunday, January 22, 2017

23-1-2017 “News Letter” from Avvai Tamil Sangam

23 -1-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை – 10 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -8

தொல்லவையுள் தோன்றுங் குடிமையும் தொக்கிருந்த

நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து

வேந்துவப்ப வாட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்

தாந்தம்மைக் கூறாப் பொருள்.

விளக்கம்

பழமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் அவையில் நல்ல குடிப்பிறப்பும், பலவகை நூலோர் கூடியிருக்கும் அவையில் நல்ல கல்வி அறிவும், போர்க்களத்தில் வேந்தன் மகிழ பகைவரை கொன்று பெற்ற வெற்றியும், தானாகத் தெரிய வேண்டுமே தவிர, தாமே தம்மைக் குறித்து புகழ்ந்து பேசக்கூடாது.

பொருள்

தொல் அவையுள் - பழைமையை ஆராயவல்லோர் கூடியி

ருக்கும் சபையிடத்தே, தோன்றும் - தானாக விளங்கித் தோன்றும், குடிமையும் - குடிப்பிறப்பும், தொக்கு இருந்த - பலவகை நூலோரும் கூடியிருந்த, நல் அவையுள் - நல்ல சபையினிடத்தே, மேம்பட்ட - மேன்மைப்பட்ட, கல்வியும் - படிப்பும், வெல் சமத்து -வெல்லும் போரிடத்தே, வேந்து - தம் வேந்தன், உவப்ப - மகிழ, அட்டு - பகைவரைக் கொன்று, ஆர்த்த - நிறைத்த, வென்றியும் - வெற்றியும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், தாம் - தாமே, தம்மை - தம்மைக் குறித்து, கூறா - புகழ்ந்துபேச வேண்டாத, பொருள் - பொருள்களாம்;

தெரியமா உங்களுக்கு  !....

சுபாஷ் சந்திர போஸ்

·         நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார்.

·         இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

·         இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்தலைவர்களாகவும் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரபுவழியை உடையது.

·         இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியார்களின் பால் ஈடுபாடுடையவராயும் அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின் பால் ஈடுபாடு கொண்டார்; துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ் தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.  மேலும் படிக்க

செய்திகள் 

இளைஞர்கள் போராட்டத்தை மார்ச் 31 வரை தள்ளிவைக்க ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் வேண்டுகோள்  - தி இந்து 

மெரீனாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்: காவல்துறை ...தினமணி

ஹிராக்கந்த் ரயில் விபத்து : பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு - விகடன்

அசாமில் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலி ... - தினத் தந்தி

அமெரிக்காவில் பீட்டாவின் தலைமையகத்தை முற்றுகையிட்ட ... - தினமலர்

 குடியரசுதினம்: முதல் முறையாக கொடியேற்றுகிறார் முதல்வர் - தினமணி

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ... - தினத் தந்தி

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

One bedroom set at A 9 Dainik Janyug Apt, Vasundhra Enclave, next to Mayur vihar extension.Rs.16000/- plus society maintenance Rs.1000/- per month.  Please contact mobile 9810067207 for details.

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

26.1.16

5.15 PM onwards

 

Sri Vaikuntnathji Mandir, Ber Sarai, opp JNU

Sri Thyagaraja's 250th Birthday Aradhanai

Delhi Muththamizh Peravai

 

Details Click here

 

5.2.16

8.00 AM onwards

 

SRI RAM MANDIR, Sector 7, Dwarka

5th MEDHA DAKSHINAMURTHY

(GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SUNDAY – 5TH FEBRUARY 2017

SRI RAM MANDIR

www.srirammandirdwarka.org

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


Thursday, January 5, 2017

05-01-2017 “News Letter” from Avvai Tamil Sangam




 

05-01-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்

மார்கழி –21 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot:  http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் - 7

வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்
செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும், - இம் மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா.

விளக்கம்

உள்ளன் என்னும் பறவை வாளை என்னும் மீனைப் பிடிக்க முயற்சிப்பதும், திறமையில்லாதவன் உயர்ந்த குடியில் பிறத்தலும், அஞ்சும் இயல்புடைய கற்றாரின் கல்வியும் ஊமை கண்ட கனாவைப் போல யாருக்கும் பயன்படாதது ஆகும் .

 

பொருள்

பிறர் - மற்றவர், தன்னை பேணுங்கால் - தன்னை விரும்பி மேன்மைப்படுத்துமிடத்து, நாணலும் - நாணுதலும், பேணார் - விரும்பாதவராய், திறன் - தகுதியை, வேறு கூறின் - வேறுபடச் சொல்லுமிடத்து, பொறையும் - அதனைப் பொறுத்தலும், அறவினையை - உபகாரச் செய்கையை, கார் - மேகம், ஆண்மை போல் - ஆளுதல் போல, ஒழுகுதலும் - (ஆளுதல் செய்து) நடத்தலும், இ மூன்றும் - இந்த மூன்றும், ஊர் - (பிறர் மேற்பட்டு) செல்லுகின்ற, ஆண்மை என்னும் - ஆண்மை என்கின்ற, செருக்கு – செல்வங்களாம்

தெரியுமா உங்களுக்கு!...  

இன்று-ஓய்வு ஊதியர் தினம்.

·         கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.

·           இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.

·           பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக்இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டான்..

செய்திகள்   

ஐந்து மாநில தேர்தலுக்கு அப்புறம்தான் மத்திய பட்ஜெட்: தேர்தல் ...தினமணி

 

 கனிமொழிக்கு பதவி இல்லை: பொதுக்குழுவுக்கு முன் குடும்ப ... தினமலர்

 

மனைவியின் கண்முன் திரையரங்கு ஊழியர் படுகொலை……தி இந்து

 

மோடி, நிதிஷ் ஒருவருக்கொருவர் பாராட்டு ………தினமலர்

 

அமெரிக்க எம்.பி.க்களாக 5 இந்தியர் பதவியேற்பு: செனட் சபையில் ...தி இந்து

 

 யாருக்கு பெரும்பான்மை உள்ளது? நிரூபிக்க அகிலேஷ் ...தினமலர்

 

தி.மு.க. பொதுக்குழுவில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் அரசியல் ...தினத் தந்தி   

 

மத்தியப் பிரதேசத்தில் மகாத்மா காந்தி படம் இல்லாத ரூ.2000 ... தினத் தந்தி

 

மனித உடலில் 'குடல் தாங்கி' என்ற புதிய உறுப்பு கண்டுபிடிப்பு …….. தினத் தந்தி

 

வீடு வாடகைக்கு  / வாங்க / விற்க

1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

 

 A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one

 attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG

 international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for

 more details – Manikandan - +919871896072

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

18.01.2017

5pm

Kamarajar Arangam, Chennai

Dr. MGR 100th Year Celebrations

Chennai Tamil Sangam

Dr. T. Elangovan: 9585933505

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com