06-6-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | |||||||
| அவ்வைதமிழ்ச்சங்கம், வைகாசி 23, (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | ||||||
நூல் அறிமுகம் - "சீதை பேசுகிறேன்" | |||||||
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது... ".....சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்"
இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00.
இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும். | |||||||
திரிகடுகம் பாடல் -77 | |||||||
கயவரைக் கையிகந்து வாழ்தல், நயவரை நள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல், தெள்ளி வடுவான வாராமல் காத்தல், - இம் மூன்றும் குடி மாசு இலார்க்கே உள. விளக்கம் கீழ்மக்களைச் சேராமல் வாழ்தலும், நீதியுடையவரை நட்பு செய்து கொள்ளுதலும், தனக்குப் பழி வரும் செயல்களைச் செய்யாதிருத்தலும், நல்லவர் செய்கைகள் ஆகும். பொருள் கயவரை - கீழ்மக்களை, கையிகந்து - கைவிட்டு (சேராமல்,) வாழ்தல் - வாழ்தலும்; நயவரை - நீதியுடையவரை, நட்டு - நட்புச் செய்து, நள் இருளும் - நடு இரவிலும், கைவிடா - கைவிடாமல், ஒழுகல் - (அவருக்கு இணங்க) நடத்தலும்; தெள்ளி - ஆராய்ந்து, வடுவான- தனக்குப் பழிப்பான காரியங்கள், வாராமல் - வரவொட்டாமல், காத்தல் - காத்துக் கொள்ளுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், குடி - குடிப்பிறப்பிலே, மாசு இலார்க்கே - குற்றம் இல்லாதவர்க்கே, உள – உண்டாகும். | |||||||
தெரியமா உங்களுக்கு !.... | |||||||
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் ஜூன் 6 ஆம் நாள் தமிழீழம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன். சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. சிவகுமாரனின் நினைவு நாளாகிய ஜூன் 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. வரலாற்றில் இன்று · 1761 - சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது. · 1832 - பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது. · 1844 - கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது. · 1971 - சோயுஸ் 11 ஏவப்பட்டது. · 1984 - இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர். · 2004 - இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. | |||||||
செய்திகள் | |||||||
தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவில் 3-வது அணி: முதல்வர் பழனிசாமி .. தி இந்து. பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள்! நியூஸ்7 தமிழ் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது மும்பை பங்குச்சந்தை ... நியூஸ்7 தமிழ் வெற்றிக்கு மிக அருகில் சென்று ஏமாற்றம் அடைந்த ஆஸ்திரேலியா! தினமணி இந்தியாவால் பாகிஸ்தான் தொடர்ந்து தோற்கடிக்கப்படுவது ... தினத் தந்தி | |||||||
வீடு வாடகைக்கு : 3 BHK DDA flat is available for rent at Mayur Vihar Phase I. Close to Metro Station (pocket 4). Semi furnished flat. South Indians preferred. Rent 25 K. Flat ready for immediate occupation. For more details contact 9313848410. |
| ||||||
உலகலாவிய சிறுகதைப் போட்டி! தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு! சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017 மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். முழுமைபெற்ற சிறுகதையை ஆனி 16, 2048 / 30.06.2017 ஆம் நாளுக்குள் மலேசிய நாட்டுப் படைப்பாளர்கள் vaiskaru@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இந்தியா மற்றும் பிற நாட்டுப் படைப்பாளர்கள் tamilkanikani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் சிறுகதையை அனுப்ப வேண்டுகிறோம். மிகச் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்படும் கதைகளுக்கு: முதல் பரிசு ஆயிரம் மலேசிய வெள்ளி(1000 இரிங்கிட்டு). இரண்டாம் பரிசு எழுநூற்றைம்பது மலேசிய வெள்ளி (750 இரிங்கிட்டு). மூன்றாம் பரிசு ஐந்நூறு மலேசிய வெள்ளி (500 இரிங்கிட்டு). ஆறுதல் பரிசுக்காகத் தெரிவுசெய்யப்படும் சிறுகதை ஒவ்வொன்றுக்கும் இருநூறு மலேசிய வெள்ளி (200 இரிங்கிட்டு) வழங்கப்படும். மிகச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முறையான தகவல் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, பகிரி(புலனத்தின்) வாயிலாகவோ தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கப்படும். சிறுகதைப் போட்டிகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசியத் தலைவர் திரு.சு.வை.லிங்கம்,மலேசியா, தொடர்பு எண் : 0104298234; மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசிய உதவித் தலைவரும் சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பாளருமான கி.தங்கராசு மலேசியா, தொடர்பு எண் : 019-2669943, 019-6011569; சிறுகதைப் போட்டிகளின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவருமான (பொ) முனைவர் போ.சத்தியமூர்த்தி தொடர்பு எண்: 09488616100. |
| ||||||
நம்மை சுற்றி |
| ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| ||
27-05-17to 15-06-17 11am to 7pm | Plot #A3, Select CityWalk District Centre, Saket | EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition | Great Modernist | http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html |
| ||
O8-0617 8 am to 6 pm | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 124th Jayanthi celebrations of Sri Chandrasekara Saraswathi Swamigal, Mahaswami of Kanchi Kamakoti Peetam | Sri Devi Kamakshi Mandir, New Delhi | DEVIKAMAKSHI MANDIR devikamakshi@gmail.com |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| ||||||
No comments:
Post a Comment