Sunday, June 4, 2017

05-6-2017 “News Letter” from Avvai Tamil Sangam

05-6-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser



அவ்வைதமிழ்ச்சங்கம்,

வைகாசி 22, (திங்கள் ), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில்.

நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது...

".....சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்"

மேலும் படிக்க

 

இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00.

 

இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள்.

இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

திரிகடுகம் பாடல் -76

மாரி நாள் வந்த விருந்தும், மனம் பிறிதாக்

காரியத்தில் குன்றாக் கணிகையும், வீரியத்து

மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும், - இம் மூவர்

போற்றற்கு அரியார், புரிந்து.        

விளக்கம்

மழைக்காலத்தில் வந்த விருந்தினரும், பொருள் வருவாயில் நாட்டம் கொண்ட வேசையும், வெற்றியை விரும்புகின்ற வீரனும், போற்றுதற்கு உரியராவார்.

தெரியமா உங்களுக்கு  !....

உலக சுற்றுச்சூழல் நாள்

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

உலகச் சுற்றுச்சூழல் நாள் பாடல்

Our cosmic oasis, cosmic blue pearl

the most beautiful planet in the universe

all the continents and the oceans of the world

united we stand as flora and fauna

 

புடவியின் பேரழகுக் கோளே!

அண்ட ஓடையில் ஒளிர்நீல முத்தே!

ஒன்றிவாழ்வோம் ஒருநிரை யாக

கண்டங்களும் கடல்களும் களித்துயிர் களோடே!

 

united we stand as species of one earth

black, brown, white, different colours

we are humans, the earth is our home.

 

புவியில் வாழும் உயிரினங் களோடும்

கருப்போ சிவப்போ பழுப்பு நிறமோ

மாந்த ரெல்லாம் ஓர்நிரை யாவோம்.

மாந்தர் நாமே நம்குடில் பூமி!

 

Our cosmic oasis, cosmic blue pearl

the most beautiful planet in the universe

 

புடவிப் பெருவெளிப் பேரழகுக் கோளே!

அண்ட ஓடையில் ஒளிர்நீல முத்தே!

 

all the people and the nations of the world

all for one and one for all

united we unfurl the blue marble flag

black, brown, white, different colours

we are humans, the earth is our home.

 

உலக நாட்டு இணைந்த மக்கள்யாம்

எலாமொருவருக்கு;ஒருவரெலார்க்கும்

நீலப் பளிங்குக்கொடி நெடிதுயர்த்தினோம்

கருப்போ சிவப்போ பழுப்பு நிறமோ

மாந்த ரெல்லாம் ஓர்நிரை யாவோம்.

மாந்தர் நாமே நம்குடில் பூமி! .

—"புவிப் பண்" இயற்றியது: அபே கே

 

"புவிப் பண்" அபே கே என்பவரால் எழுதப்பட்டு 2013 சூன் மாதத்தில் உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இந்திய அமைச்சர்கள் கபில் சிபல், சசி தரூர் ஆகியோரால் புதுதில்லியில் வெளியிடப்பட்டது.[7] ஐநா பொது அவையின் அலுவல் மொழிகளான அரபு, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் ஆகிய ஆறு மொழிகளில் புவியின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.[8] அவற்றைவிட இந்தி, நேபால மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

                                            

வரலாற்றில் இன்று

·         1959 - சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது

·         1977 - முதலாவது தனிக்கணினி அப்பிள் II விற்பனைக்கு விடப்பட்டது.

1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களின் பொற்கோயிலில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

மேலும் படிக்க

செய்திகள்

ஜூன் 14ல் கூடுகிறது தமிழக சட்டசபை- தினமலர்

மேட்டூர் அணை நீர்மட்டம் 24 அடியாக உயர்வு: ஜூன் 12-ந் தேதி ...- மாலை மலர்

விடாது கருப்பாய் விரட்டும் அமலாக்கத்துறை - தினகரனை மீண்டும் ...- Oneindia Tamil
ஜிசாட்-19 செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது .. தி இந்து.

வாரத்தின் முதல் நாள் சென்செக்ஸ், நிஃப்டி ஃபிளாட்! -விகடன்
தீவிரவாதத்திற்கு உடந்தை.. கத்தாருடன் அனைத்து வகை உறவும் ... Oneindia Tamil
இங்கிலாந்தில் இந்தியா - பாக் மேட்ச்... கிரிக்கெட் கடவுளை தரிசித்த ... Oneindia Tamil

இந்தியா - பாக்., கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு காரணமான 5 முக்கிய ...- BBC தமிழ்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல்மாட்ரிட் கிளப் 12-வது ... மாலை மலர் -

தங்கம் மீது 15.7% வரி மக்களை பாதிக்கும்: பீடி, சிகரெட் வரியை ... தினமணி

வீடு வாடகைக்கு :

3 BHK DDA flat is available for rent at Mayur Vihar Phase I. Close to Metro Station (pocket 4).  Semi furnished flat. South Indians preferred. Rent 25 K. Flat ready for immediate occupation. For more details contact 9313848410.

 

உலகலாவிய சிறுகதைப் போட்டி!

தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு! சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017

மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

முழுமைபெற்ற சிறுகதையை ஆனி 16, 2048 / 30.06.2017 ஆம் நாளுக்குள் மலேசிய நாட்டுப் படைப்பாளர்கள் vaiskaru@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இந்தியா மற்றும் பிற நாட்டுப் படைப்பாளர்கள்    tamilkanikani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் சிறுகதையை அனுப்ப வேண்டுகிறோம்.

மிகச் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்படும் கதைகளுக்கு:

முதல் பரிசு ஆயிரம் மலேசிய வெள்ளி(1000 இரிங்கிட்டு).

இரண்டாம்  பரிசு எழுநூற்றைம்பது மலேசிய வெள்ளி (750 இரிங்கிட்டு).

மூன்றாம் பரிசு ஐந்நூறு மலேசிய வெள்ளி (500 இரிங்கிட்டு).

ஆறுதல் பரிசுக்காகத் தெரிவுசெய்யப்படும் சிறுகதை ஒவ்வொன்றுக்கும் 

இருநூறு மலேசிய வெள்ளி (200 இரிங்கிட்டு) வழங்கப்படும்.

மிகச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முறையான தகவல் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, பகிரி(புலனத்தின்) வாயிலாகவோ தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கப்படும்.

சிறுகதைப் போட்டிகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசியத் தலைவர்  திரு.சு.வை.லிங்கம்,மலேசியா, தொடர்பு எண் : 0104298234;

மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசிய உதவித் தலைவரும் சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பாளருமான  கி.தங்கராசு மலேசியா, தொடர்பு எண் : 019-2669943, 019-6011569;

சிறுகதைப் போட்டிகளின்  இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவருமான (பொ) முனைவர் போ.சத்தியமூர்த்தி  தொடர்பு எண்:  09488616100.

மேலும் அறிய…

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

27-05-17to 15-06-17

11am to 7pm

Plot #A3, Select CityWalk District Centre, Saket

EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition

Great Modernist

http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html

 

O8-0617

8 am to 6 pm

Sri Devi Kamakshi Mandir, New Delhi

124th Jayanthi celebrations of Sri Chandrasekara Saraswathi Swamigal, Mahaswami of Kanchi Kamakoti Peetam

Sri Devi Kamakshi Mandir, New Delhi

DEVIKAMAKSHI MANDIR devikamakshi@gmail.com   

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 


 

 

 

 

 

No comments:

Post a Comment