| 27-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
|
| அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி –14 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
| திரிகடுகம் பாடல் -42 | ||||||
| கழகத்தால் வந்த பொருள் காமுறாமை, பழகினும் பார்ப்பாரைத் தீப்போல், ஒழுகல், உழவின்கண் காமுற்று வாழ்தல், - இம் மூன்றும் அழகு என்ப வேளாண் குடிக்கு. விளக்கம் சூதாட்டத்தினால் கிடைத்த பொருளை விரும்பாமையும், பிராமணரை அஞ்சி நடத்தலும், பயிர் செய்து வாழ்தலும் வேளாளர்க்கு அழகு. பொருள் கழகத்தால் - சூதாட்டத்தினால், வந்த - கிடைத்த பொருள் - பொருளை, காமுறாமை - விரும்பாமையும்; பழகினும் - (பலநாள்) பழகினாலும், பார்ப்பாரை - பிராமணரை, தீப்போல் - தீக்கு அஞ்சி நடப்பதுபோல், ஒழுகல் - அஞ்சி நடத்தலும்; உழவின் கண் - பயிர் செய்தலில், காமுற்று - விருப்பம் செலுத்தி, வாழ்தல் - வாழுதலும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், வேளாண்குடிக்கு வேளாண்மையுடைய குலத்துக்கு, அழகு என்ப - (பெரியோர்) அழகு என்று சொல்வர்; | ||||||
| தெரியமா உங்களுக்கு !.... | ||||||
| உலகத் திரையரங்க நாள் · உலகத் திரையரங்க நாள் (World Theater Day) யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1961 ஆம் ஆண்டில் உலகத் திரையரங்க நாள் கொண்டாடப்பட்டது. · இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று உலகத் திரையரங்க தினம் சர்வதேச திரையரங்க நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது. | ||||||
| செய்திகள் | ||||||
| டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்பவர்கள் தேசத்துக்கு சேவையாற்றுகிறார்கள்: மோடி - தி இந்து தில்லியில் போராட்டம்: தமிழக விவசாயிகளுக்கு வைகோ நேரில் ... - தினமணி கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா - தினமலர் ஓட்டுநர் உரிமத்துக்கும் ஆதார் கட்டாயம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - தி இந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி மத்திய அரசு இன்று ...- தினகரன் மக்கள் பங்களிப்புடன் புதிய இந்தியா: பிரதமர் மோடி வலியுறுத்தல் - தினமணி ஆஸ்திரேலியாவிலும் அட்டூழியம் இந்தியர் மீது இனவெறி ... - தினகரன் | ||||||
| நம்மை சுற்றி |
| |||||
| Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
| 8.4.2017 &9.4.2017 6.00 AM onwards | MAA AADHYA SAKTHI DHAM MANDIR, Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 89 | 16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam
| ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM
|
| ||
| 31.4.2017 to 2.5.2017
| Delhi Tamil Sangam
| Thyagaraja Aradhana Festival | Thiyagaraja Music Festival Trust associated with Muththamilzh Peravai |
| ||
| Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
Sunday, March 26, 2017
27-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Saturday, March 25, 2017
Re: 24-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam
24-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam
Is this 1mail not displaying correctly? View it in your browser
அவ்வை தமிழ்ச் சங்கம்,
பங்குனி –11 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,
Web: http://www.avvaitamilsangam.
org Email: avvaitamilsangam@gmail.com
Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend
திரிகடுகம் பாடல் -41
அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும், துளங்கினும்
தன் குடிமை குன்றாத் தகைமையும், அன்பு ஓடி
நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும், - இம் மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை.
விளக்கம்
துன்பப்படுவோருக்கு ஈதலும், வறுமையான காலத்திலும் ஒழுக்கத்தோடு இருத்தலும், நட்பு செய்தவரைப் பெருகச் செய்தலும் முதன்மையான அறங்களாகும்.
பொருள்
அலந்தார்க்கு - (வறுமையால்) துன்பப்பட்டு வந்தவர்கட்கு, ஒன்று - (அவர் விரும்பும்) ஒரு பொருளை, ஈந்த புகழும் - ஈந்ததனாலாகிய இசையும்; துளங்கினும் - (வறுமை முதலிய வற்றால்) தளர்ந்த காலத்தும். தன் குடிமை - தன் குடிப்பிறப்புக்குத் தகுந்த ஒழுக்கம், குன்றாத் தன்மையும் - குறையாத இயல்பும்; அன்புஓடி - அன்பு மிகுந்து, நாள் நாளும் - நாடோறும், நட்டார் - நட்புச்செய்தவரை, பெருக்கலும் - பெருகச் செய்தலும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், கேள்வியுள் எல்லாம் - கேட்கப்படும் அறங்கள் பலவற்றிலும், தலை - முதன்மையானவையாம்;
தெரியமா உங்களுக்கு !....
அசோகமித்திரன்
· அசோகமித்திரன் (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார்.
· எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது.
· இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.
· 1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர் மேலும் படிக்க
பி. எஸ். இராமையா
· பி. எஸ். இராமையா (B.S. Ramiah, மார்ச் 24, 1905 - மே 18, 1983) தமிழக எழுத்தாளர். பல சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் எழுதியவர். மணிக்கொடி கால எழுத்தாளர் எனப் போற்றப்படுபவர்.
· மகாத்மா காந்தி தொடங்கிய உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டதால், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றார்.
· இவர் மணிக்கொடி இயக்கத்தைப் பற்றி எழுதிய "மணிக்கொடி காலம்" என்ற இலக்கிய வரலாறு புத்தகத்திற்கு 1982ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. இராமையா 304 சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்கள் எழுதினார். சி. சு. செல்லப்பா, "இராமையாவின் சிறுகதைப் பாணி" என்ற நூலை எழுதி வெளியிட்டார்.மேலும் படிக்க
அனைத்துலக காச நோய் நாள்
· அனைத்துலக காச நோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
· 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது.
· 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது. மேலும் படிக்க
செய்திகள்
எம்.ஜி.ஆரின் கனவு இல்லம்: தொடங்கியது உரிமை யுத்தம் - தி இந்து
மனித உரிமை மீறல் குறித்த விசாரணை : இலங்கைக்கு மேலும் 2 ... - தினமலர்
தினகரன், மதுசூதனன், கங்கை அமரன், தீபா வேட்புமனு தாக்கல் - தினமணி
பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது: இங்கிலாந்து பாராளுமன்ற ...- தினத் தந்தி
தலைசிறந்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் - தி இந்து
போரை எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் இருக்க ...- தினமணி
உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தங்கம் வென்றார் ஆங்குர் மிட்டல்- தினகரன்
பிரிட்டிஷ் ஓபன்: ஜோஷ்னா வெளியேற்றம் - தினமணி
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact
20.3.2017
to
26.3.2017
7.30 AM to 10.00 PM
Noida Shankar Mutt, Sector 42, Noida.
SRI SAHASRA CHANDI MAHA YAGNAM consisting of Sri Durga Sapthasathi Japam & Homam
Sri Vishnu Sahasranama Satsangam
Sector 34, Noida
V Badrinarayanan
9312590372 Suresh Sitaraman 9811933299
K Rajasekar
9868102051 V Jayaraman
9871526767 S Muralidharan
9811008805
25.3.2017
&
26.3.2017
TTD Sri Venkateswara Temple, Udyan Marg, New Delhi
170th Thyagaraja Aradhana Festival
The Karnataka Sangeetha Sabha, Delhi/Shimla (Regd)
In association with
TEAM AP/TS BHAVAN-TIRUMALA TIRUPATI DEVASTHANAMS
24.3.2017
to
26.3.2017
11.00 AM onwards
Natya Tarangini' - Pushp Vihar, Sector 6, Saket, New Delhi
Exhibition of Artwork
Natya Tarangini
26.3.2017
6.30 PM
AISWARYA MAHAGANAPATI TEMPLE - lawrance Road, Keshava puram, Delhi - 35
Lec-Dem/Workshop on NAVAGRAHA KRITIs of
Muttuswami Dikshitar
- Dr.(Mrs) M.Bhageerathi, Head of the Department,
Dept. of Music, University of madras.
Rasikapriya
8.4.2017
&9.4.2017
6.00 AM onwards
MAA AADHYA SAKTHI DHAM MANDIR,
Block E-5, [ Opp. District Park ]
Sector – 16, Rohini, Delhi - 89
16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam
ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM
31.4.2017
to
2.5.2017
Delhi Tamil Sangam
Thyagaraja Aradhana Festival
Thiyagaraja Music Festival Trust associated with Muththamilzh Peravai
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
--
---
You received this message because you are subscribed to the Google Groups "Indrayakural" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to indrayakural+unsubscribe@googlegroups.com .
For more options, visit https://groups.google.com/d/optout .
