| 9-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
|
| அவ்வை தமிழ்ச் சங்கம், தை – 27 (புதன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
| திரிகடுகம் பாடல் -17 | ||||||
| மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும், கற்புடையாள் பூப்பின்கண் சாராத் தலைமகனும், வாய்ப் பகையுள் சொல் வென்றி வேண்டும் இலிங்கியும், - இம் மூவர் கல்விப் புணை கைவிட்டார். விளக்கம் மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும். பொருள் மூப்பின்கண் - மூப்பு வந்த இடத்தும் , நன்மைக்கு - துறவறத்துக்கு, அகன்றானும் - (அஞ்சி) நீங்கினவனும் கற்பு உடையாள் - கற்புடைய மனைவியை, பூப்பின்கண் பூத்து நீராடிய பின், சாரா - மருவாத, தலைமகனும் - கணவனும், வாய்ப் பகையுள் - (சோர்வாலுண்டாகின்ற) வாய்மொழிப்பழி நான்கனுள், சொல்வென்றி - (தான் கூறிய) சொல்லினது வெற்றியை, வேண்டும் - விரும்பித் துணிகின்ற, இலிங்கியும் - தவவேடத்தானும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், கல்விப் புணை - கல்வியறிவாகிய தோணியை, கைவிட்டார் - முற்றும் நீங்கினவராவர்; ; | ||||||
| தெரியமா உங்களுக்கு !.... | ||||||
| சி. பஞ்சரத்தினம் · சி. பஞ்சரத்தினம் (Sivaramakrishnan Pancharatnam, 9 பெப்ரவரி 1934 – 28 மே 1969) என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். · பஞ்சரத்தினம் வடிவியற்கட்டம் எனப்படும் வெவ்வேறு தளவிளைவுற்ற ஒளிக்கதிர்கள் குறுக்கிட்டுவிளைவு ஏற்பட்டு வெளிவரும் ஒளிக்கதிரில், தளவிளைவு வடிவியலைச் சார்ந்து ஒரு கட்ட வேறுபாடு உள்ளதைக் கண்டறிந்தார். இவருடைய ஆய்வுகள் பெரும்பாலும், படிக ஒளியியற் துறையைச் சார்ந்தது. மேலும் படிக்க பாபா ஆம்தே( டிசம்பர் 26, 1914 – பெப்ரவரி 9, 2008) · பாபா ஆம்தே எனப் பரவலாக அறியப்பட்ட முரளிதர் தேவதாசு ஆம்தே ஓர் இந்திய சமூக சேவகர், செயற்பாட்டாளர். இவர் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதில் அக்கறை காட்டினார். · வழக்கறிஞரான இவர், இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் போராட்டத் தலைவர்களுக்குச் சார்பாக வாதாடினார். காந்தியின் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கி இருந்த இவர், தனது வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாக வாழ்ந்தார்.. மேலும் படிக்க சாவி (எழுத்தாளர்) · சா. விசுவநாதன் (ஆகத்து 10, 1916 - பெப்ரவரி 9, 2001) சாவி என்ற புனைபெயரில் எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் இதழ் ஆசிரியர். தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். சிறுவயதிலேயே இதழ்த்துறையில் நுழைந்த இவர் கல்கி, ராஜாஜி, காமராசர், பெரியார் முதலான முக்கியமானவர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். · கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். மேலும் படிக்க தஞ்சாவூர் பாலசரஸ்வதி · தஞ்சாவூர் பாலசரஸ்வதி (T. Balasaraswati, மே 13, 1918 - பெப்ரவரி 9, 1984) தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர் · பாலசரஸ்வதி, தனது நான்காவது வயதிலேயே இசையும் நடனமும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். · தஞ்சாவூர் நால்வர்களில் ஒருவரான சின்னையாவின் வழிவந்தவரான கண்டப்பா என்பவர் இவரது குரு. ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது.மேலும் படிக்க | ||||||
| செய்திகள் | ||||||
| நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: நீதிமன்ற வரலாற்றில் முதன்முறை - தி இந்து ஆளுநர் சென்னை வருகை: அரசியல் குழப்பத்திற்கு தீர்வு ... - தினமணி விசாரணை கமிஷன் பற்றி கவலையில்லை; முதல்வராக பதவியேற்பேன்: சசிகலா - தி இந்து கவர்னர் நாளை சென்னை வர உள்ளதை அடுத்து அதிமுக எம்.எல்.ஏ ... - தினத் தந்தி வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து வாரம் ரூ.50000 வரை எடுக்கலாம் ... - தி இந்து வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் வென்ற ...- தினத் தந்தி | ||||||
| நம்மை சுற்றி | ||||||
| Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
| 11.2.17 6.30 PM onwards | Delhi Tamil Sangam, Sector-5, RK Puram, New Delhi | Bharatanatyam recital by Ms. Sapna Attavar | Delhi Tamil Sangam |
| ||
| 12.2.17 9.00 AM to 1.00 PM | FREE Medical Camp |
| ||||
| 12.2.17 & 19.2.17 6.00 PM onwards | Lecture Hall, IIC Annexe building, Max Mueller Marg, New
Delhi | 6th year Purandaradasa Tyagaraja music festival Srividhya Sairam performing on 12th Feb, 2017 and S.R.Vinay Sharva performing on 19th Feb, 2017. | Ramakrishnapuram South Indian Society (Regd.) in association with India International Centre |
|
| |
| 18.2.17 & 19.2.17
| Dr. Ambedkar Auditorium, AP & Telangana Bhavan, New Delhi | Sri Ramanujar's 1000th year Jeyanthi Children can participate in the Quiz Competition on Sri Ramanujar's Life and History. | Sri Ramanuja Kainkarya Sabha in association with Delhi Telugu Academy | 9868248831 9968689305 Details Click Here
|
| |
| 19.2.17 6.00 PM onwards | Delhi Tamil Sangam, Sector-5, RK Puram, New Delhi | Carnatic Flute Recital" by Delhi Sri P.Nagarajan (Disciple of Dr.Prapancham Sitaram | Delhi Tamil Sangam |
| ||
| 24.2.17 8.30 PM onwards
| Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi | Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert" | Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy |
| ||
| Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
Wednesday, February 8, 2017
9-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Monday, February 6, 2017
7-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam
| 7-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
|
| அவ்வை தமிழ்ச் சங்கம், தை – 25 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
| திரிகடுகம் பாடல் -16 | ||||||
| மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப் பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க் கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர் சாவா உடம்பு எய்தினார். விளக்கம் மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும். பொருள் மண்ணின்மேல் - மண்ணுலகத்தில், வான் - பெரிய, புகழ் - புகழை, நட்டானும் - நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் - பெண்களுள், மாசுஇல் - குற்றமற்ற, சீர் - சிறப்புடைய கற்பு உடையாள் - கற்புடையவளை, பெற்றானும் - (மனைவியாகப்) பெற்ற கணவனும், உண்ணு நீர் - உண்ணப்படுகின்ற நீர் குறைவு இன்றி - குறைவுபடாதபடி, கூவல் - கிணறுகளை, தொட்டானும் - தோண்டி வைத்தவனும், இ மூவர் - ஆகிய இம் மூவரும், சாவா - (எக்காலத்தும்) இறவாத, உடம்பு - (புகழ்)உடலை, எய்தினார் - பெற்றவராவார்; | ||||||
| தெரியமா உங்களுக்கு !.... | ||||||
| தேவநேயப் பாவாணர் (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) · தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். · மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.மேலும் படிக்க | ||||||
| செய்திகள் | ||||||
| சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து? - தி இந்து ஜெயலலிதா மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை: ரிச்சர்டு பீல் - தினமணி சசிகலா பதவிஏற்பு எப்போது என்பதில் குழப்பம்; நாளையும் கவர்னர் ... - தினத் தந்தி 'தனித்தன்மை' காக்கப் போராடும் நாகாலாந்து! - தி இந்து சட்டவிரோத செயல்களை தடுக்க செல்போன் பயன்படுத்துவோரின் ...- தினத் தந்தி செல்லாத நோட்டாக ரூ.2.5 லட்சத்துக்குள் டெபாசிட் ...- தினகரன் வட இந்தியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.8 ஆக பதிவு- தினமலர் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் ராஜிநாமா - தினமணி ஐபிஎல் ஏலம்: இஷாந்த் சர்மா உள்ளிட்ட 7 பேருக்கு அடிப்படை விலை ...- தினமணி | ||||||
| நம்மை சுற்றி | ||||||
| Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
| 18.2.17 & 19.2.17
| Dr. Ambedkar Auditorium, AP & Telangana Bhavan, New Delhi | Sri Ramanujar's 1000th year Jeyanthi Children can participate in the Quiz Competition on Sri Ramanujar's Life and History. | Sri Ramanuja Kainkarya Sabha in association with Delhi Telugu Academy | 9868248831 9968689305 Details Click Here
|
| |
| 24.2.17 8.30 PM onwards
| Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi | Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert" | Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy |
| ||
| Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
Sunday, February 5, 2017
Weekend Tour Packages and Pilgrimage Tour trip for family and Group Housing society.
6-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam
| 6-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
|
| அவ்வை தமிழ்ச் சங்கம், தை – 24 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
| திரிகடுகம் பாடல் -15 | ||||||
| பொய் வழங்கி வாழும் பொறியறையும், கை திரிந்து தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும், ஊழினால் ஒட்டி வினை நலம் பார்ப்பானும், - இம் மூவர் நட்கப் படாஅதவர். விளக்கம் பொய் பேசி வாழும் செல்வந்தன், தனக்கு மேலானவன் தாழ்ந்த போது போற்றாதவன், விதியால் நண்பன் துன்பப்படும்போது பயனை எதிர் பார்ப்பவன், இம்மூவரும் யாராலும் நட்பு கொள்ளத் தகாதவராவார். பொருள் பொய் - பொய்ச் சொற்களை, வழங்கி - பேசி, வாழும் - (அதனால் உயிர்) வாழ்கின்ற, பொறி அறையும் - திருவில்லாதவனும், கை - முறைமை, திரிந்து - வேறுபட்டு, தாழ்வு இடத்து - (ஒருவன்) தாழ்ந்த இடத்து, நேர் - (அவனைத் தனக்கு) நேராக, கருதும் - நினைக்கின்ற, தட்டையும் - மூங்கில் போலும் (புரைபட்ட) மனத்தவனும், ஊழினால் - (ஒருவனைச் சேரவேண்டிய) முறையினால், ஒட்டி - சேர்ந்து, வினை - (அவன்) காரியத்திலே, நலம் (தனக்குப்) பயன், பார்ப்பானும் - பார்க்கின்றவனும், இ மூவர் - ஆகிய இம் மூவரும், நட்க - (யாவராலும்) நட்புக் கொள்ள, படாஅதவர் - தகாதவர்; | ||||||
| தெரியமா உங்களுக்கு !.... | ||||||
| அரங்கசாமி நாயக்கர் · அரங்கசாமி நாயக்கர் (1884 பிப்ரவரி 6 – 1943 சனவரி 6) பிரெஞ்சிந்தியா என அழைக்கப்பட்ட இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்; தமிழறிஞர். 'பிரெஞ்சிந்திய காந்தி' என்று அழைக்கப்பட்டவர். · பிரஞ்சு நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த புதுச்சேரியின் விடுதலைக்காகப் போராடினார். திருநள்ளாறு நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றினார். சுயமரியாதை இயக்க ஈடுபாட்டால் தனது வீட்டிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு சமபந்தி உணவளித்தவர்.மேலும் படிக்க | ||||||
| செய்திகள் | ||||||
| தமிழகத்தின் 21-வது முதல்வர் ஆகிறார் சசிகலா: 9-ம் தேதி பதவியேற்பு விழா - தி இந்து உடல்நலக்குறைவு காரணமாக சசிகலா கணவர் நடராஜன் ...– தினகரன் பாஜக அலை வீசுவதால் அகிலேஷ் அச்சம்: உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் - தி இந்து டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பாவில் தீவிர போராட்டம்- தினமணி காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு விமானத்தில் ...- தினத் தந்தி முன்னால சீறுது மயிலக் காளை; பின்னால பாயுது மச்சக்காளை ... - தினமலர் மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் காவல்துறை ... - தினத் தந்தி மெரினா கடலில் எண்ணெய் படலம் பசுமை தீர்ப்பாயம் விசாரணை - தினகரன் மொபைல் இன்டர்நெட் கட்டணம்; பி.எஸ்.என்.எல்., அதிரடி சலுகை - தினமலர் ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்தியா - தி இந்து | ||||||