Tuesday, July 26, 2016

27-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

27-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி -12(புதன்}, திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

இன்று -  நமது கனவு நாயகன் திரு APJ அப்துல் கலாம் அய்யாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

ஐந்திணை ஐம்பது- 4 -  பாலை_03

மகள் போக்கிய நற்றாய் கவன்று சொல்லியது

பாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும்,
ஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின்,
காய்ந்து கதிர் தெறூஉம் காடு?.

பதவுரை  :-

பால் போலும் - பாலினைப்போன்ற, ஆய்ந்த மொழியினாள் - ஆராய்ந்தமைந்த மொழிகளுடைய என் மகள், காதலன்பின் - தன் தலைவன் பின்னாலே, கதிர் - ஞாயிறு, காய்ந்து - வெப்பத்தை மிகுத்து, தெறூஉம் - சுடுகின்ற, காடு - காட்டு வழியிலே, பாவையும் - விளையாட்டுக்குரிய பொம்மையும். பந்தும் - பந்தும், பவள வாய் - பவளம் போன்ற வாயினைக் கொண்ட, பைங் கிளியும் - பச்சைக் கிளியும், ஆயமும் - தோழிகள் கூட்டமும், இவை - ஆகிய இவைகளில், ஒன்றும் - ஒன்றினையுங் கூட, நினையாள் - நினைக்காதவளாய், செல்லும் கொல் - செல்வாளோ ! (என்று நற்றாய் தனக்குள்ளே கவலைப்பட்டவளாய்ச் சொல்லிக் கொண்டாள்.)

விளக்கம்:-

 பால் போன்று இனிய ஆராய்ந்தமைந்த மொழிகளையுடைய என் மகள், சூரிய கிரகணங்களால் வெப்பம் மிகுந்துள்ள பாலை நிலக்காட்டு வழியில், விளையாடற்குரிய பொம்மைகள், பந்துகள், பவளம் போன்ற வாயினைக் கொண்ட பைங்கிளிகள், தோழிகள் கூட்டம் ஆகிய இவற்றில் ஒன்றையேனும் எண்ணிப் பாராமல், தன் காதலன் பின் செல்லும் தன்மையுடையவளாய் இருப்பாளோ?" என்று நற்றாய், தன் மகளைக் குறித்துத் துன்புற்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

செய்திகள்   

ல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி போராட்டம் ...தினத் தந்தி

முதலாம் ஆண்டு நினைவுநாள் ராமேஸ்வரத்தில் இன்று கலாம் ...தினகரன்

ஒசூரில் ஏரி உடைந்தது: வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 2 பேர் ...  

விமானம் மாயமாகி 6 நாட்கள் ஆனது---- தினமலர்

சரியாகச் செயலாற்றாத ஊழியர்களுக்கு ஊதியம்- பதவி உயர்வு இல்லை ... தி இந்து

இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவு--- தினமலர்

16 ஆண்டுகால உண்ணாவிரதத்தை கைவிடுகிறார் இரோம் ஷர்மிளா—தினமணி  

ஜெயலலிதா முயற்சியால் 77 மீனவர்கள் விடுதலை தமிழக அரசு அறிக்கை--- தினத் தந்தி

ஜப்பானில் பயங்கரம் மனநல காப்பகத்துக்குள் புகுந்து கத்திக் ... தினத் தந்தி

வங்கதேசத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: மாபெரும் ...

ஹிலரி , ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் வேட்பாளரானார்—தி இந்து

சூரிய ஒளி விமானம் வரலாற்று சாதனை! உலகம் முழுவதும் 40 ஆயிரம் ... தினகரன்

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ---- 2 BHK with a big drawing/dining room (for living & dining), Kitchen, 2 bathrooms, well ventilated & airy- well maintained portion in second floor available for rent.  The property is located in IP Extension, Patparganj in a secured society.  Well furnished house with wardrobes, ACs in all rooms, 4 burner gas stove, RO also fitted with IGL gas pipeline. Location- Near Balco market  only vegetarian  preferred. May contact -Smt. Lakshmi- 8800522689

விற்பனைக்கு

------ Two BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor :  Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685

------

  2 BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security.  Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold.Contact: Mr K Sriram 8826567774

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

26-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

26-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி -11(செவ்வாய்}, திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

                                                             இன்று -  கார்கில் தினம்
சிறுநரிக் கூட்டங்கள் செருக்கோடு வாலாட்டி  சிங்கத்தின் வீரத்தால்  சிதைந்திட்ட நன்நாள்!
முறுக்கிட மீசையிலா முண்டங்கள் சூழ்ச்சியின்  முறையற்ற ஆளுமையை முறியடித்த திருநாள்!
வெறுத்திடும் உலகத்தின் வேண்டாத விசமங்களைவிதைத்திடும் நாட்டினை வேரறுத்த நன்நாள்!
பொறுத்தது போதுமென பொங்கிய இந்தியா பொருத்தமாய் பாடத்தை புகட்டிய பொன்நாள்!

வளமிக்க காசுமீரை வளைத்திடும் பேராசை  வந்திட பாகிசுதான் வரம்பற்று நடந்தனர்!
களம்கண்ட இந்தியரோ கைகொண்ட வெற்றியாய் கார்கில் நகரத்தை கண்ணென மீட்டனர்!
உளம்மகிழ தாய்மண்ணில் உதிரத்தை சிந்தியே  உரமிக்க ராணுவம் ஓங்கிட வென்றனர்!
பளிச்சிடும் நம்கொடி பறந்திட கார்கிலில் பனயமாய் உயிரினை பாராது வைத்தனர்!

கொட்டிடும் மழையிலும் குளிரது  நடுக்கத்தில் குலையாது தாய்நாட்டை கும்பிட்டு காத்தனர்!
நாட்டினது எல்லையில் நாள்தோறும் ராணுவம் நாட்டுக்கு அரணாக நலப்பணி செய்தனர்!
காட்டிலும் மேட்டிலும் கடும்பசி கொண்டாலும்  கார்கில் நமதென களம்வென்று போற்றினர்!
தீட்டிய வைரமென திசைதோறும் பணியாற்றும் தியாகத்தின் தீபங்களை தலைவணங்கி வாழ்த்துவோம்!

  நன்றி கண்ணன்சேகர்,

ஐந்திணை ஐம்பது- 1 -  பாலை_01

தலைமகனது பிரிவுக் குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது

விலங்கல்; விளங்கிழாய்! செல்வாரோ அல்லர்
அழல் பட்டு அசைந்த பிடியை, எழில் களிறு,
கல் சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையால் கொண்டு,
உச்சி ஒழுக்கும் சுரம்.

பதவுரை  :-

விளங்கு இழாய் - விளக்கமான அணிகலன்களை யணிந்த தலைவியே ! அழல் பட்டு - காட்டுத் தீயினிடத்திலே அகப்பட்டு. அசைந்த - வருந்திய, பிடியை - பெண்யானையை, எழில் களிறு - அதனது அழகிய ஆண் யானையானது, கல் சுனை - மலைச் சுனையினது, சேறு இடை - சேற்றோடு கூடிய, சில் நீரை - சிறிதாகிய நீரினை, கையால் கொண்டு - தன் கையினாலே வாரி யெடுத்து, உச்சி - (அப் பெண் யானையினது) தலை உச்சியிலே, ஒழுக்கும் - பெய்தற்கிடமான, சுரம் - பாலை நிலவழியிலே, செல்வாரோ - (தலைவர்) செல்ல வல்லரோ, அல்லர் - செல்லமாட்டார், விலங்கல் - (ஆதலின், அவர் செலவினைத்) தடுக்காதிருப்பாயாக.)

விளக்கம்:-

 அழகிய அணிகலன்களை அணிந்த தலைவியே! காட்டுத்தீயில் அகப்பட்டு வருந்தும் பெண்யானை மீது அன்புகொண்ட அழகிய ஆண்யானை, மலைச் சுனையில் இருந்த சேற்றோடு கூடிய சிறிதளவினவான நீரைத் தன் துதிக்கையால் முகந்து தன் பெண்யானையினது தலை உச்சியில் பெய்தற்கு இடமான பாலை நில வழியில் நம் தலைவர் செல்லமாட்டார். ஆகலின் அவர் பயணத்தை விலக்க வேண்டாம்" எனத் தலைவனின் பிரிவை அறிந்து ஆற்றாத தலைவியைத் தோழி தேற்றினாள்.

செய்திகள்   

டெல்லியில் கார்கில் போர் தியாகிகளுக்கு ராணுவ மந்திரி அஞ்சலி--- தினத் தந்தி

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கிடையாது; டாக்டர் அன்புமணி ... தினத் தந்தி

ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை, ஒருவன் கைது--- தினத் தந்தி

2ஜி ஊழல் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு! ராசா, கனிமொழி நேரில் ...

பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளில் படிக்க குழந்தைகளை அனுப்ப ... தி இந்து

அமெரிக்க இரவு விடுதியில் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 14 பேர் சாவு

ஆட்சியர் இல்லத்தில் குடியேற முயன்ற நூற்பாலை ... தினமணி  

ரூ.32510 கோடிக்கு யாகூவை வாங்குகிறது வெரிஸான்  

வேளாண் பல்கலை.,யில் 2ம் கட்ட கவுன்சிலிங்: புது விதிமுறையால் ..தினமலர்.  

ஆடிப்பெருக்கு விழாவிற்காக காவிரியில் கூடுதல் நீர் திறப்பு  

5-வது நாளாக மாயமான விமானத்தை தேடும் பணி இன்று முதல் ... தினத் தந்தி

பிசிசிஐ- இல் உறுப்பினராகிறது புதுச்சேரி கிரிக்கெட் சங்கம்!---- தினமணி

 ஊக்க மருந்து சோதனையில் தோல்வி: மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ...தி இந்து

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ---- 2 BHK with a big drawing/dining room (for living & dining), Kitchen, 2 bathrooms, well ventilated & airy- well maintained portion in second floor available for rent.  The property is located in IP Extension, Patparganj in a secured society.  Well furnished house with wardrobes, ACs in all rooms, 4 burner gas stove, RO also fitted with IGL gas pipeline. Location- Near Balco market  only vegetarian  preferred. May contact -Smt. Lakshmi- 8800522689

விற்பனைக்கு

------ Two BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor :  Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685

------

  2 BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security.  Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold.Contact: Mr K Sriram 8826567774

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Sunday, July 24, 2016

25-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

25-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி -10(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  பாலை_01

பருவம் கண்டு அழிந்த தலைமகள், தோழிக்குச் சொல்லியது

உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்,
எதிரி முருக்கு அரும்ப, ஈர்ந் தண் கார் நீங்க, எதிருநர்க்கு
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்,
துன்பம் கலந்து அழியும், நெஞ்சு..

பதவுரை  :-

உதிரம் - குருதியானது, துவரிய - சார்ந்து பிடித்த, வேங்கை - பெரும்புலியின், உகிர்போல் - நகங்களைப் போல, எதிரி - பருவத்தோடு பொருந்தி, முருக்கு - முருக்கமரங்கள், அரும்ப - செவ்விய மொட்டுகளை வெளிவிட, ஈர்ம் தண் கார் - மிகவும் குளிர்ந்த மேகங்கள், நீங்க - விலகிவிட, எதிருநர்க்கு - (தலைவனும் தலைவியுமாய்) எதிர்ப்பட்டுக் கூடினார்க்கு, இன்பம் பயந்த - நன்மையைச் செய்த. இளவேனில் - சித்திரையும் வைகாசியுமாகிய இளவேனிற் காலத்தை, காண்தொறும் - என் கண்கள் காணும் வேளைகளிலெல்லாம், நெஞ்சு - என் மனம், துன்பம் கலந்து - துன்பப்பட்டு, அழியும் - வருந்தா நிற்கும். (என்று தலைவி தோழியிடங் கூறினாள்.)

விளக்கம்:-

 உதிரத்தை உறிஞ்சிய புலியினது குருதி தோய்ந்த நகங்களைப் போலத் தமக்குரிய பருவத்தோடு பொருந்தி முருக்கமரங்கள் செந்நிற அரும்புகளைத் தோற்றுவிக்க, மிகவும் குளிர்ந்த மேகங்கள் வானத்தினின்று விலகிட, தலைவனும், தலைவியுமாய் எதிர்ப்பட்டுக் கூடினார்க்குப் பேரின்பம் செய்த இளவேனிற் காலத்தை என் கண்கள் காணும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் துன்பத்தினால் அழிகின்றது" எனத் தலைவி தோழியிடம் கூறினாள்

செய்திகள்   

வேதம் இல்லாமல் நாடு இல்லை

மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா இந்த வாரம் தாக்கல்
காணாமல் போன விமானத்தை செயற்கைக்கோள் மூலம் தேடும் பணி ...
 
நேபாள பிரதமர் கே.பி. ஓலி ராஜிநாமா  

30-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது; அ.தி.மு.க. அரசின் பட்ஜெட் ...தினத் தந்தி

சீனாவுக்கு உளவு பார்த்த 3 பத்திரிக்கையாளர்கள் இந்தியாவை ... தினமணி  

பாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதல் 10 பேர் பலி----- தினத் தந்தி

பாக்.,கில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை  
நிலக்கடலைக்கு ஊடு பயிராக பயறு சாகுபடி செய்ய மானியம்
 
நகரங்களில் இணைய சேவை; முதலிடத்தில் தமிழகம்  

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 24 நீதிபதிகள்: உச்ச ...  

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க மே.இ.தீவுகள் போராட்டம் ----- தினமணி   

ஊக்க மருந்து சோதனையில் தோல்வி: மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ...  

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ---- 2 BHK with a big drawing/dining room (for living & dining), Kitchen, 2 bathrooms, well ventilated & airy- well maintained portion in second floor available for rent.  The property is located in IP Extension, Patparganj in a secured society.  Well furnished house with wardrobes, ACs in all rooms, 4 burner gas stove, RO also fitted with IGL gas pipeline. Location- Near Balco market  only vegetarian  preferred. May contact -Smt. Lakshmi- 8800522689

விற்பனைக்கு

------ Two BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor :  Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685

------

  2 BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security.  Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold.Contact: Mr K Sriram 8826567774

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Thursday, July 21, 2016

22-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

22-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி -07(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  மருதம்_10

ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் புணர்ந்து நீங்கிய பின்பு,
சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது

குளிரும் பருவத்தேஆயினும், தென்றல்
வளி எறியின், மெய்யிற்கு இனிதாம்;-ஒளியிழாய்!-
ஊடி இருப்பினும், ஊரன் நறு மேனி
கூடல் இனிது ஆம், எனக்கு.

பதவுரை  :-

ஒளி இழாய் - அழகுமிக்க அணிகலன்களையணிந்துள்ள தோழியே ! குளிரும்பருவத்தே ஆயினும் - குளிர் காற்றுவீசும் மாரிகாலமானாலும், தென்றல் வளி - தென்றற்காற்று, எறியின் - வீசினால். மெய்யிற்கு - நமது உடலுக்கு, இனிதாம் - இன்பமாகும். (அதுபோல,) ஊடி இருப்பினும் - நான் தலைவனோடு மாறுபட் டிருந்தாலும், ஊரன் - அம்மருதநிலத்தூர்த் தலைவனது, நறு மேனி - நல்ல வடிவத்துடன், கூடல் - புணர்தலானது, எனக்கு இனிதாம் - எனக்கு இன்பத்தைத் தாராநின்றது (என்று தலைவி தோழியினிடங் கூறினாள்.)

விளக்கம்:-

 ஒளி வீசும் அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! குளிர்காற்று வீசும் மாரிக் காலமானாலும் தென்றல் காற்று வீசினால் நமது உடம்பிற்கு இன்பம் உண்டாகும். அதுபோல என் தலைவனைக் காணாதபொழுது அவன் செய்த தவற்றினை நினைத்து ஊடியிருப்பேனாயினும் அவனைக் கண்டபோது அவன் தவறுகள் எல்லாம் எனக்குப் புலப்படா. ஆதலின் அவனுடைய மணமிகுந்த மேனியைக் கூடுதலானது எனக்கு இன்பமாயுள்ளது" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்

செய்திகள்   

கழிவறை கட்டியவர்களுக்கு கபாலி பட டிக்கெட் கவர்னர் கிரண்பெடி ... தினத் தந்தி

குஜராத்தில் தலித் இளைஞர்கள் மீதான தாக்குதல்: உள்துறை ...தினத் தந்தி

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள்: அலுவலர்கள் குழு ...  

கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்கிறது மோடி அரசு: மம்தா பானர்ஜி ...  

காவிரி கரையோர கிராமங்களில் தண்டோரா போட்டு எச்சரிக்கை--- தினமலர்

கிரானைட் முறைகேடு வழக்கு : மேலூர் நீதிமன்றத்தில் ...  

400 மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு---

தென்னக நதிகளை இணைப்பதில் பிரச்னை:மக்களவையில் அமைச்சர் ...தின மணி

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி எதிரொலி:துருக்கியில் அவசர நிலை ... தின மணி

147 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு--- தின மணி

நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிப்பு---- தினத் தந்தி

 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி ...

ரியோ ஒலிம்பிக்: ரஷிய முறையீட்டை தள்ளுபடி செய்த விளையாட்டு ...

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ---- 2 BHK with a big drawing room (for living & dining)...2 bathrooms, well ventilated & airy- well maintained portion onGround floor. Open verandah in front & back. Ample water supply. East facing.

Location- Near Sec 19 Post office, Opp. Shani bazaar. Close to both Metro stns- sec 18 & sec 16.

 only vegetarian  preferred. May contact ---- Shri  Sundararaman- 9818504858

விற்பனைக்கு
Two BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor :  Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685